மீனாட்சி அம்மன் கோவிலில் ஆனி உத்திரம்: சிவகாமி அம்பாள் சமேத நடராஜர் வீதி உலா
கோவில்பட்டி மீனாட்சியம்மன் சமேத சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் ஆனி உத்திரத்தை முன்னிட்டு நேற்று ஞாயிற்றுகிழமை மாலை சிவகாமி அம்பாள் சமேத நடராஜ பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு பூஜை, திருவீதி உலா நடைபெற்றது.

மாலை 3.25 மணிக்கு கணபதி ஹோமம்,கும்ப பூஜைகள், பூர்ணாகுதி, தீபாராதனை. நடைபெற்றது. மாலை 4.25 மணிக்கு மேல் சிவகாமி அம்பாள் சமேத நடராஜ பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்.நடந்ததது,.
பக்தர்கள் அபிஷேகத்திற்கு பால், தயிர், இளநீர், அபிஷேக பொருட்கள், பூக்கள், பழங்கள் வல்னகினர்,.இவை அனைத்தும் அபிஷேகத்துக்கு பயன்படுத்தப்பட்டது.
மாலை 6 மணிக்கு மேல் சிறப்பு தீபாராதனை நடைபெற்றது, ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

இரவு 7.15 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் சிவகாமி அம்பாள் சமேத நடராஜர் திருவீதி உலா நடைபெற்றது. நகரின் முக்கிய வீதிகள் வழியாக உலாவந்த பிறகு மீண்டும் கோவிலை அடைந்தனர்,.







