கோவில்பட்டி நீதிமன்ற வளாகத்தில் சாலை, குடிநீர் வசதி கேட்டு தொடர் உண்ணாவிரத போராட்டம்; கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு கூட்டத்தில் முடிவு
கோவில்பட்டி கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பின் ஆலோசனை கூட்டம் தலைவர் க. தமிழரசன் தலைமையில் நடைபெற்றது. நடைபெற்ற வேலைகள் குறித்து செயலாளர் வழக்கறிஞர் பெஞ்சமின் பிராங்கிளின் பேசினார்.
கூட்டத்தில் இந்திய கலாச்சார நட்புறவுக் கழகத்தின் மாநில துணை தலைவர் அபிராமி முருகன், கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு பொருளாளர் சுபேதார் Kகருப்பசாமி, நிர்வாகிகள், பாலாஜி, மோகன், இந்திய தேசிய காங்கிரஸ் தேவராஜ், ராஜாராம், பழனிச்சாமி, மக்கள் நீதி மய்யம் ரமேஷ், ராதாகிருஷ்ணன், மனிதநேய மக்கள் கட்சி செல்வராஜ், தமிழ்நாடு காமராஜ் பேரவை நாஞ்சில் குமார், இரட்டைமலை சீனிவாசனார் இயக்கம் செல்வகுமார், மக்கள் நலம் அறக்கட்டளை மாரிமுத்து குமார், ஜெகன், கோமதிராஜ், தியாகி விஸ்வநாததாஸ் பேரவை மகேந்திரன், சங்கர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் இரண்டாவது பெரிய நகரம் கோவில்பட்டி. இங்குள்ள நீதிமன்ற வளாகத்தில் 5 நீதிமன்றங்கள், சார் ஆட்சியர் அலுவலகம், காவல்துறை கண்காணிப்பாளர், சிறைச்சாலை, அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, வட்டாட்சியர் அலுவலகம், பி.எஸ்.என்.எல்.l, வணிகவரித்துறை, போக்குவரத்து காவல்துறை, வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அதிகாரி அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது.
இவ்வளாகத்தில் அருகில் அரசு தலைமை மருத்துவமனை, தலைமை தபால் அலுவலகம், சமூக நீதி பெண்கள் விடுதி, காமராஜர் மெட்ரிகுலேசன் பள்ளி, போன்ற அமைப்புகளும் இயங்கி வருகிறது. இந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள பல்வேறு அலுவலகங்களுக்கு பல்வேறு பணிகள் காரணமாக தினசரி ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் மாணவர்கள், வந்து செல்கின்றனர்.
இங்குள்ள சாலை குண்டும் குழியுமாக நடக்க முடியாத, வாகனங்களை இயக்க முடியாத அளவுக்கு மிகவும் மோசமாக உள்ளது. மேலும் இப்பகுதியில் குடிநீர் வசதி மற்றும் கழிப்பறை வசதி இல்லாததால் இங்கு வரும் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகிறார்கள். எனவே, இவ்வளாகத்தில் சாலை, குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட வசதிகளை செய்து தர வலியுறுத்தி ESIஅலுவலகம் அருகில் கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பாக 1-7-2026 தேதி முதல் தொடர் உண்ணாவிரதம் இருப்பது என தீர்மானிக்கப்பட்டது.

ஒவ்வொரு நாள் போராட்டத்துக்கும் தலைமை தாங்குபவர் விவரம் வருமாறு:-
1-7-2026-.க. தமிழரசன் ஆர். ராஜசேகரன்.
2-7-2026- வழக்கறிஞர் பெஞ்சமின் பிராங்கிளின், ராதாகிருஷ்ணன்.
3-7-2026- சுபேதார் .கருப்பசாமி.,வழக்கறிஞர் பாபு.
4-7-2026 அபிராமி முருகன். வழக்கறிஞர் முத்துக்குமார்.
6-7-2026-வழக்கறிஞர் ரவிக்குமார்.,ஆம்ஸ்ட்ராங்.
7-7-2026- நாஞ்சில் குமார், மாரிமுத்து குமார்.
8-7-2026-வழக்கறிஞர் ஜெயஸ்ரீ கிறிஸ்டோபர்,.மேரி ஷீலா.
9-7-2026-வழக்கறிஞர் சீனிராஜ். ,மா . காளிதாஸ்.
10-7-2026-துரைராஜ்., வழக்கறிஞர் மகேஷ்.
11-7-2026-ரமேஷ்., மகேந்திரன்.
மேலும் மந்தித்தோப்பு சாலை விரிவாக்கம் மற்றும் ஆக்கிரமிப்புகளை முறைப்படுத்தல் போன்றவைகளை செய்ய எவ்வித முன் முயற்சியும் எடுக்காமல் செயல்படாமல் இருக்கும் கோவில்பட்டி நகராட்சி ஆணையாளரைக் கண்டித்து 13-7-2026 ல் நகராட்சி முன்பு முற்றுகை போராட்டம் நடத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.







