கோவில்பட்டி வெங்கடேஸ்வரா கார்டன் குடியிருப்போர் பாதுகாப்பு ஆலோசனை கூட்டம்
கோவில்பட்டி புறநகர் அப்பனேரி பஞ்சாயத்துக்கு உட்பட்ட வெங்கடேஸ்வரா கார்டன் வேகமாக வளர்ந்து வரும் குடியிருப்பு பகுதி ஆகும் . தற்போது 260க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன, மேலும் ஏராளமான வீடுகளின் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன.
இப்பகுதியில் சமீபத்தில் ஒரு திருட்டு சம்பவம் நடந்தது. இதையொட்டி வெங்கடேஸ்வரா கார்டன் குடியிருப்போர் பாதுகாப்பு தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கோலப்பன், கனகராஜ், கோபாலகிருஷ்ணன், புருஷோத்தமன், ரமேஷ் ஆகியோர் முன்னிலையில் கூட்டம் நடந்தது.
கூட்டத்தில் 150-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தங்கள் கருத்துகளை பகிர்ந்து கொண்டனர், இரவு நேர காவலாளிகள் இருவர் நியமிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுப்பப்பட்டது. இதனை அனைவரும் ஒருமனதாக ஏற்றுக்கொண்டனர்,
இதை தொடர்ந்து இரவு நேர காவல் பணியில் இருவரை நியமிப்பது என்று முடிவு செய்யப்பட்டது. இதற்கான சம்பள தொகையை குடியிருப்பவர்களிடம் வசூலித்து கொடுப்பது என்று முடிவு செய்யப்பட்டது.இதற்கு ஆண்டு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது.
இதனை நிர்வாகம் செய்ய தன்னார்வலர்களாக கார்த்திக், பாஸ்கர் ரெங்கராஜ், சவுந்தர் ராஜ், சேது, ஸ்டீபன், சதீஷ்குமார், நவீன் குமார், , சக்திவேல், சோலைசாமி, முருகேஸ்வரி, பிரியா, பாலா, சங்கரேஸ்வரி, உஷா,கவுசல்யா ,ஆகியோர் நியமிக்கப்பட்டனர்,
மேலும் தற்போது இங்கு வசிப்பவர்களை தேடி வருபவர்கள் வீடுகளை அடையாளம் கண்டுபிடிக்க தெரு பெயர் பலகை இல்லாதது பெரும் குறையாக இருக்கிறது என்ற புகார் எழுப்பப்பட்டது. அதற்கான ஏற்பாடுகளை உடனடியாக தொடங்கி ஒவ்வொரு தெருவிலும் அடையாளத்தை குறிக்கும் வகையில் பெயர் பலகைகள் வைக்க தேவையான நடவடிக்கை எடுக்க முடிவு எடுக்கப்பட்டது.
வாரத்தில் இரண்டு நாட்கள் குப்பைகள் சேகரிக்க ஊராட்சி வாகனம் வந்தாலும் ஒரு சிலர் தங்கள் வீட்டு குப்பைகள் காலி மனையில் கொட்டுவதால் சுகாதார கேடுகள் ஏற்படுகின்றன,, இதனை தடுக்க வேண்டும். தாறுமாறாக வளர்ந்து காணப்படும் மரங்களை வெட்டி அழகுபடுத்த வேண்டும். என்ற கோரிக்கைகளும் எழுந்தன.

இந்த குறைகளை தீர்க்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூட்டத்தில் உறுதி கூறப்பட்டது, இதற்கிடையே இங்கு குடியிருப்போர் அனைவரும் ரேஷன் கார்டு மற்றும் வாக்காளர் அடையாள அடடை ஆகியவற்றின் முகவரியை இங்குள்ள முகவரிக்கு மாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டனர், அப்படி மாற்றினால் தான் நமது குடியிருப்புக்குரிய அடிப்படை தேவைகளை முழுமையாக பெற ,முடியும் என்று தெரிவிக்கப்பட்டது.
மேலும் வீடுகள் தோறும் சிசிடிவி கேமரா பொருத்த ஒவ்வொருவரும் முயற்சிக்க வேண்டும். இரவு நேரத்தில் வீட்டின் வராண்டாவில் ஒரு விளக்காவது எரிய விட வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது.
ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிற்றுக்கிழமை அன்று குடியிருப்போர் சங்க ஆலோசனை கூட்டம் நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது,. தொடர்ந்து வெங்கடேஸ்வரா கார்டன் குடியிருப்போர் நல சங்கத்துக்கு புதிய நிர்வாகிகள் விரைவில் தேர்வு செய்யப்படுவார்கள் என்று கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.







