கோவில்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை , அரசு விடுமுறை நாட்களில் நடக்கும் ஆக்கி போட்டி
Oplus_16908288


ஆக்கி யூனிட் ஆப் தூத்துக்குடி சார்பாக 79 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு 17 வயதுக்குட்பட்டோருக்கான பள்ளிகளுக்கு இடையிலான ஆண்கள் ஆக்கி போட்டி கோவில்பட்டி நாடார் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் இன்று ஜூன் 21 ஆம் தேதி தொடங்கியது.
இப்போட்டி ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும், அரசு விடுமுறை நாட்களிலும் நடத்தப்படும் இப் போட்டியில் மொத்தம் 8 பள்ளிகள் கலந்து கொண்டு விளையாட இருக்கின்றன. இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் அனைத்தும் லீக் முறையில் நடத்தப்படுகின்றன.

A பிரிவில் கோவில்பட்டி செயின்ட் பால்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, தூத்துக்குடி சீனா வானா அரசு மேல்நிலைப்பள்ளி, கோவில்பட்டி வேல்ஸ் வித்யாலயா பள்ளி , கோவில்பட்டி நாடார் மேல்நிலைப்பள்ளி ரெட், அணி
B பிரிவில் கோவில்பட்டி காமராஜ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, வானரமுட்டி அரசு மேல்நிலைப்பள்ளி, கயத்தார் அரசு மேல்நிலைப்பள்ளி, கோவில்பட்டி நாடார் மேல்நிலைப்பள்ளி ப்ளூ அணிகள் இடம் பெற்றுள்ளன.
இன்று நடைபெற்ற முதல் போட்டியை நாடார் மேல்நிலைப்பள்ளி செயலாளர் வழக்கறிஞர் ரத்தினராஜா தலைமை தாங்கி துவக்கி வைத்தார். வீரர்களை ஆக்கி யூனிட் ஆப் தூத்துக்குடி பொருளாளர் காளிமுத்து பாண்டியராஜா அறிமுகம் செய்து வைத்தார்.
துவக்க விழாவில் தலைமை ஆசிரியர் செல்வம், கணித ஆசிரியர் துரை , நாடார் மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர்கள் சசிகுமார், கூத்தராஜன் , முத்த ஆக்கி வீரர் மணிவண்ணன் சென்ட் பால்ஸ் உடற்கல்வி ஆசிரியர் முருகன் , வேல்ஸ் வித்யாலயா உடற்கல்வி ஆசிரியர்கள் சுரேந்தர், மாரியப்பன், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

முதல் போட்டியில் செயின்ட் பால்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 1-0 என்ற கோல் கணக்கில் வேல்ஸ் வித்யாலயா பள்ளியை வீழ்த்தி வெற்றி பெற்றது . வெற்றி கோலை வீரர் ஹரி ஆகாஷ் அடித்து அணிக்கு பெருமை சேர்த்தார்.
முதல் வெற்றியின் மூலம் செயின்ட் பால்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 3 புள்ளிகள் பெற்று முன்னிலையில் உள்ளது
இந்த போட்டியில் நடுவர்களாக காளிதாஸ், கௌதமன் செயல்பட்டனர் போட்டிக்கான ஏற்பாடுகளை ஆக்கி யூனிட் ஆஃப் தூத்துக்குடி செயலாளர் முனைவர் குரு சித்திர சண்முக பாரதி, நாடார் மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் வேல்முருகன் செய்து வருகிறார்கள்







