கோவில்பட்டி ரோட்டரி சங்கத்திற்கு சிறந்த சேவைக்கான விருது
Oplus_16908288

ரோட்டரி மாவட்டம் 3212 சார்பில் அறுவடை எனும் தலைப்பில் தூத்துக்குடியில் நடந்த விருதுகள் வழங்கும் விழாவில் கோவில்பட்டி ரோட்டரி சங்கத்திற்கு சிறந்த சேவைக்கான விருது வழங்கப்பட்டது.
ஆண்டுதோறும் ரோட்டரி சங்கங்களின் சேவைகளை பாராட்டி ஜூன் மாதம் பல்வேறு தலைப்புகளில் மண்டல மாவட்ட அளவில் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.

தூத்துக்குடியில் நடந்த விருதுகள் வழங்கும் விழாவில் மண்டல அளவில் கோவில்பட்டி ரோட்டரி சங்கம் சிறந்த சேவைகள் மற்றும் சிறந்த சங்கத்திற்கான விருதுகள் மற்றும் சான்றிதழ்களை பெற்றுள்ளது.
தூத்துக்குடியில் நடந்த விழாவிற்கு மாவட்ட ஆளுநர் தினேஷ் பாபு தலைமை தாங்கினார் .ரோட்டரி மாவட்ட பொதுச் செயலாளர் சாதிக் அலி,
அவார்ட்ஸ் மாவட்ட செயலாளர் நாகேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்

அவார்ட்ஸ் விழா சேர்மன் பின்டோ வில்வராயர் அனைவரையும் வரவேற்றார்.
மாவட்ட முன்னாள் ஆளுநர் பாஸ்கரன் சிறந்த சேவைக்கான விருது மற்றும் சான்றிதழ்களை கோவில்பட்டி ரோட்டரி சங்கத் தலைவர் ராஜ்குமாரிடம் வழங்கினார்.
மாவட்ட முன்னாள் ஆளுநர்கள், கோவில்பட்டி ரோட்டரி சங்க நிர்வாகிகள் பழனி குமார்,முத்து செல்வம் விநாயகாரமேஷ்,ரமேஷ் குமார், சீனவாசன்,தாமோதர கண்ணன்,நாராயணசாமி, முத்துமுருகன், ரவிமாணிக்கம், கிருஷ்ணசாமி, மாரியப்பன், ரத்தின குமார், அருண், காளியப்பன், உட்பட பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் அவார்ட்ஸ் விழா செயலாளர் மகாலிங்கம் நன்றி கூறினார்.







