பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவச சீருடை
கோவில்பட்டியில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மக்கள் நல அறக்கட்டளை சார்பாக பல்வேறு பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவ மாணவியர்க்கு இலவச பள்ளி சீருடை வழங்கும் நிகழ்ச்சி புதுரோடு முத்தையாமல் தெருவில் நடந்தது.

அறக்கட்டளை நிறுவனத்தலைவர் நேதாஜி பாலமுருகன் பள்ளி மாணவ மாணவியருக்கு பள்ளி சீருடை மற்றும் இனிப்பு வழங்கினார்.
நிகழ்ச்சியில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மக்கள் நல அறக்கட்டளையை சேர்ந்த நிர்வாகிகள் நாகராஜ், வெங்கட்ராஜ்,காமராஜ்,அருணாச்சலம்,சந்தோஷ் மற்றும்பொதுமக்கள் கலந்து கொண்டனர்








