குஷ்பு-சுந்தர் சி மகள் அவந்திகாவுக்கு திருமணம்: மோடியை சந்தித்து அழைப்பிதழ் வழங்கினர்
Oplus_16908288
தமிழில் வருஷம் 16 படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகம் ஆனவர் குஷ்பு.
மும்பையை சேர்ந்த குஷ்பு 1990 களில் தமிழ் திரையுலகில் கொடிகட்டி பறந்தார்.

ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், சத்யராஜ், பிரபு உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் நடித்த குஷ்பு, முறைமாமன் படத்தின் இயக்குநர் சுந்தர்.சி.யை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு அவந்திகா, அனந்திதா ஆகிய இரு மகள்கள் உள்ளனர். குஷ்பு தற்போது தற்போது தீவிர அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில் குஷ்பு – சுந்தர்.சி தம்பதி, தனது மூத்த மகள் அவந்திகா திருமணத்திற்காக பிரதமர் மோடியை நேரில் சந்தித்து அழைப்பிதழ் வழங்கினர்.
இந்த தகவலை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள குஷ்பு கூறியிருப்பதாவது:-
“இந்திய பிரதமர் மோடியை சந்திக்கும் பாக்கியம் எங்களுக்குக் கிடைத்தது. பிரதமர் நரேந்திரமோடி இன்று டெல்லியில் இருந்தார். அப்போது நானும் என் கணவர்சுந்தர் சியும் எங்கள் மகளின் திருமணத்திற்காக அழைப்பிதழை பிரதமர் மோடியிடம் வழங்கினோம். மோடி எங்களை மனமுவந்து வாழ்த்தினார்.

தனது பரபரப்பான பணிகளுக்கு மத்தியிலும் எங்களுக்காக நேரம் ஒதுக்கிய அவருக்கு நாங்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்.
நாங்கள் அவருக்கு மிகவும் கடமைப்பட்டவர்களாகவும், பணிவுடனும் உணர்கிறோம். நன்றி பிரதமர் ஜி” இவ்வாறு குஷ்பு பதிவிட்டுள்ளார்.
குஷ்பு -சுந்தர்.சி-யின் மகள் அவந்திகா மற்றும் அவரது வருங்கால கணவர் ஷ்ரவன் ஆகியோரும் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்







