தேர்தலில் வெற்றி: கோவில்பட்டி தி.மு.க. வேட்பாளர் கருணாநிதிக்கு ராகவேந்திரா சேவா அறக்கட்டளை நிர்வாகிகள் வாழ்த்து
கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில் தொடர்ந்து மூன்று முறை வெற்றி பெற்று எம்.எல்.ஏ. மற்றும் அமைச்சராக இருந்தவர் கடம்பூர் ராஜு. இந்த முறை நடந்ததேர்தலில் களம் இறங்கிய கடம்பூர் ராஜுவுக்கு இந்த தேர்தல் பெரும் சவாலாக இருந்தது.
வழக்கமாக திமுக கூட்டணி கட்சி வேட்பாளர் தான் இந்த தொகுதியில் நிருத்தபப்ட்டு வந்தனர். இந்த முறை அது மாறி திமுக வேட்பாளராக நகராட்சி தலைவராக இருக்கும் கருணாநிதி வேட்பாளராக அறிவிக்கபப்ட்டார், மேலும் தமிழக வெற்றிக் கழக வேட்பாளராகபாலசுப்பிரமனியன் அறிவிக்கப்பட்டார், இதன் காரணமாக போட்டி கடுமையாகியது,

தேர்தல் முடிவு கடம்பூர் ராஜுவுக்கு சாதகமாக அமையவில்லை,. திமுக மற்றும் தமிழக வெற்றி கழக வேட்பாளர்களுக்கு இடையே போட்டி என்ற நிலை உருவானது, கடும் போட்டியில் திமுக வேட்பாளர் கருணாநிதி வெற்றி பெற்றார்,
தேர்தல் வெற்றியை தொடர்ந்து கா. கருணாநிதியை பல்வேறு தரப்பினர் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

அதன்படி அவரது இல்லத்தில் கோவில்பட்டி ஸ்ரீ ராகவேந்திரா சேவா அறக்கட்டளை நிறுவனர் சீனிவாசன்,தலைவர் ஜெயக்கொடி பொருளாளர் கார்த்திகேயன், அறக்கட்டளை நிர்வாகிகள் கதிரேசன்,,காளிராஜ், மகேஸ்வரன், சண்முகசுந்தரம், தங்கராஜ், எஸ்.பி.பாண்டியன்,
கவுன்சிலர்கள் சண்முகவேல், லவராஜா, தமிழக ஆசிரியர் கூட்டணி மாநில துணை பொது செயலாளர் கயத்தாறு கணேசன், மாவட்டச் செயலாளர் ஜீவானந்தம், ஆசிரியர்கள் அன்பழகன்,ஆனந்த செல்வின், நகராட்சி நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியர் செந்தில்குமரன், இயக்கம் செந்தில் உட்பட பசுமை நிர்வாகிகள் பலர் கலந்து மாலை கொண்டு அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்







