த.வெ.க.வுக்கு காங்கிரஸ் ஆதரவு என்பது மக்கள் தீர்ப்புக்கு எதிரானது; தி.மு.க. கண்டனம்
தமிழகத்தில் ஆட்சி அமைக்க த.வெ.க-வுக்கு காங்கிரஸ் ஆதரவு அளிக்க முன்வந்துள்ளதை தி.மு.க. வன்மையாகக் கண்டித்துள்ளது. நீண்டகாலக் கூட்டணியைத் தகர்த்து, மக்கள் தீர்ப்புக்கு எதிராகக் காங்கிரஸ் செயல்படுவதாக தி.மு.க. குற்றம் சாட்டியுள்ளது.
இது தொடர்பாக திமுக செய்தித் தொடர்பாளர் சரவணன் அண்ணாதுரை கூறியதாவது:-
த.வெ.க-வுக்கு ஆதரவு அளிப்பது என்ற காங்கிரஸின் நிலைப்பாடு மிகவும் குறுகிய பார்வை கொண்டது. 2029 நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க-வை வீழ்த்த முடியும் என நாங்கள் நம்பியிருந்த சூழலில், காங்கிரஸ் ஒரு நிலையற்ற கூட்டணிக் கட்சியாகத் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டுள்ளது. காங்கிரஸை இனி நம்ப முடியாது என்ற கருத்து நாடு முழுவதும் பரவத் தொடங்கியுள்ளது.”

தேர்தல் முடிவுகள் வெளியாகி ஒரு நாளே ஆன நிலையில், காங்கிரஸ் எடுத்துள்ள இந்த முடிவு இண்டியா கூட்டணியில் உள்ள அகிலேஷ் யாதவ், தேஜஸ்வி யாதவ், உத்தவ் தாக்கரே போன்ற பிற தலைவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் என. பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ்-க்கு இடம் கொடுக்கக் கூடாது என்பதற்காகவே இந்த முடிவை எடுத்ததாகக் காங்கிரஸ் கூறுவதை. ஏற்க முடியாது.
காங்கிரஸ் கட்சியைத் தி.மு.க. ஒருபோதும் ஏமாற்றியதில்லை 2016-ல் காங்கிரஸுக்குக் கணிசமான இடங்களை ஒதுக்கி வெற்றி பெறச் செய்தது தி.மு.க. ராகுல் காந்தியைப் பிரதமர் வேட்பாளராக முதல் முதலில் துணிச்சலுடன் முன்னிறுத்தியவர் தலைவர் மு.க. ஸ்டாலின்.

தி.மு.க-வின் கடின உழைப்பாலும், செலவிட்ட வளங்களாலுமே 2024-ல் ராகுலின் செல்வாக்கு உயர்ந்தது. தற்போதைய தேர்தலில் காங்கிரஸ் 5 தொகுதிகளில் வெற்றி பெறவும் இதுவே காரணம்.
இவ்வாறு சரவணன் அண்ணாதுரை கூறி உள்ள்ளார்.







