” உணவு முறை அது தரும் ஆரோக்கியம் ” கருத்தரங்கம்
கோவில்பட்டி சகாராவை தாண்டாத ஒட்டகம் கல்வி நிறுவனம் மற்றும் இலக்கியச் சாரல் இணைந்து உணவும் வாழ்வும் என்ற
உணவு முறை அது தரும் ஆரோக்கியம் என்ற கருத்தரங்கத்தை கோவில்பட்டி விஸ்வாஸ் மற்றும் சிவதாம் கல்வி அறக்கட்டளை தியான மண்டபத்தில் நடத்தின.

வானொலி புகழ் கிருஷ்ணன் அனைவரையும் வரவேற்றார். முன்னாள் தலைமை ஆசிரியர் ப. ஜான்கணேஷ் தலைமை தாங்கினார். கோவில்பட்டி நாடார் காமராஜ் மெட்ரிக் பள்ளி முதல்வர் கி. பிரபு ஜாய், கிராம நிர்வாக அலுவலர் முருகானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆசிரியை விநாய சுந்தரி உடல் நலம் காக்கும் காய்கறிகள் பற்றிய நாட்டுப்புற பாடல் பாடினார்.
சிறப்பு விருந்தினர் ஞான ஒளி மலர் இந்திராணி காய்கறிகள் மற்றும் சைவ உணவுகளின் நன்மைகள் பற்றியும், வரம் நேச்சுரல்ஸ் இயக்குநர் அழகு சங்கரேஸ்வரி மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களின் பயன்பாடுகள் பற்றியும் பேசினார்கள். முன்னாள் வேளாண் ஆசிரியர் கோ. சுரேஷ்குமார் மைக்ரோகிரின் வளர்ப்பு முறைகள் மற்றும் பன்பாடுகள் பற்றியும் நேரடி செயல் விளக்க பயிற்சி அளித்தார்,
ஆசிரியர் மா. முருகேசன்நன்றி கூறினார். நிகழ்ச்சியில் தமிழாசிரியை ராதா ,யதுனா டிரேடர்ஸ் தமிழ்த்தம்பி, முன்னாள் தமிழாசிரியர் போத்திராஜ் மற்றும் முன்னாள் தபால் துறை அலுவலர் தவமணி உட்பட பலர் கலந்து கொண்டனர்,

நிகழ்ச்சியின் முடிவில் சகாராவை தாண்டாத ஒட்டகம் நிறுவனர் தினகரன் நாம் மறந்துபோன விளையாட்டுகளை குழந்தைகளுக்கு ஞாபகபடுத்தும் விதமாக நுங்கு வண்டி ரேஷ் , டயர் வண்டி ரேஷ், கிட்டிபுள்ள விளையாட்டு, கிளித்தட்டு , தட்டாங்கல் விளையாட்டு பற்றி நேரடியாக குழந்தைகளுக்கு விளக்கம் அளித்து உற்சாகமாக விளையாடுவதன் நோக்கம் பற்றி விளக்கி பேசினார்.







