கோவில்பட்டி அருகே இடைசெவல் கிராமத்தில் நாளை இலவச மருத்துவ முகாம்
கோவில்பட்டி அருகே இடைசெவல் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நாளை 16/11/2025 ஞாயிறு
காலை 9 மணிமுதல் மதியம் 2 மணி வரை இலவச மருத்துவ முகாம் நடைபெறுகிறது.
கோவில்பட்டி கமலா மருத்துவமனை நடத்தும் இந்த மருத்துவ முகாமில், குழந்தைகள் நல மருத்துவர் ர.ராஜசேகர்

மகப்பேறு, மகளிர்நலம் மற்றும் குழந்தையின்மை சிறப்பு மருத்துவர்,ரா.இந்துமதி
சர்க்கரை நோய் மற்றும் உயர் ரத்த அழுத்த நோய் சிறப்பு மருத்துவர்,ஆ.வினோதினி
எலும்பு முறிவு, விளையாட்டுக் காயங்கள் மற்றும் மூட்டுமாற்று அறுவைசிகிச்சை நிபுணர் மா.முத்துகிஷோர் ஆகியோர் பரிசோதனை செய்கிறார்கள்.
முகாமில் ரத்தஅழுத்தம் (Bp),ரத்த சர்க்கரை அளவு (Sugar),தேவைப்படும் நபர்களுக்கு Ecg ஆகிய சோதனைகள் இலவசமாக செய்யப்பட உள்ளன.

மேலும் மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகளும் இலவசமாக வழங்கப்பட உள்ளன.
எனவே, பொதுமக்கள் அனைவரும் முகாமில் கலந்துகொண்டு பயனடையுமாறு கமலா மருத்துவமனை நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.







