கோவில்பட்டி கல்லூரியில் நூலக விழா போட்டிகள்
கோவில்பட்டி, கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரியில் நூலகத்துறை சார்பாக, நூலகத்தந்தை “டாக்டர். எஸ்.ஆர்.அரங்கநாதன்” 133-வது பிறந்தநாளை “நூலக விழா” கொண்டாடப்பட்டது,
இதையொட்டி , கட்டுரை, கதை சொல்லுதல், ஓவியம், புத்தக விமர்சனம், புத்தக அட்டை வடிவமைத்தல் என பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து பரிசளிப்பு விழா நடைபெற்றது.
சுயநிதிப்பாடப்பிரிவு நூலகர் ச.காந்திமதி வரவேற்று பேசினார்,. கல்லூரி முதல்வர் மூ.சுப்புலெட்சுமி தலைமை தாங்கினார். அவர் நூலக வாரவிழா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி நூலகம் மற்றும் புத்தக வாசிப்பு குறித்து பேசினார்.
சுயநிதிப்பாடப்பிரிவுகளின் இயக்குநர் பா.மகேஸ்குமார் போட்டி தேர்வுகளில் வெற்றி பெற நூலகம் சிறந்த வழிகாட்டி என்று எடுத்து கூறினார்,

கோவில்பட்டி என்லைட் கேரியர் சென்டர் நிர்வாகியும், கல்லூரி முன்னாள் மாணவருமான சு.மகேஸ்வரன் சிறப்பு விருந்திராகக் கலந்து கொண்டு. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார். மேலும் UPSC Civil Service தேர்வு மற்றும் மத்திய, மாநில அரசுத் தேர்வுகள் பற்றிய விவரங்களை காணொலி மூலம் எடுத்துரைத்து போட்டி தேர்வுகளில் வெற்றி பெற வழிகாட்டுதல்களை எடுத்துக் கூறி சிறப்புரையாற்றினார்.
நூலகப் பொறுப்பாளர் சு.பாலா, இக்கல்வியாண்டில் 5.9.2025 முதல் நடைபெற உள்ள இலவச TNPSC மற்றும் RRB வகுப்புகள் பற்றி அறிவித்து நன்றி கூறினார்.
விழா ஏற்பாடுகளை நூலகப் பொறுப்பாளர் சு.பாலா, நூலகர் முனைவர் ச.காந்திமதி, நூலக ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர்கள் மற்றும் வாசகர் வட்ட மாணவ, மாணவியர்கள் செய்து இருந்தனர்..







