கோவில்பட்டியில் தாய்ப்பால் தினம் பேரணி
கோவில்பட்டி ரோட்டரி கிளப் மற்றும் சொர்ணா நர்சிங் கல்லூரி இணைந்து உலக தாய்ப்பால் தினத்தை முன்னிட்டு தாய்ப்பாலின் மகத்துவத்தை மக்களுக்கு தெரிவிக்கும் விதமாக பேரணி நடைபெற்றது.

பேரணிக்கு ரோட்டரி கிளப் தலைவர் ராஜ்குமார் தலைமை தாங்கினார். செயலாளர்.பழனிகுமார் வரவேற்றார். மாவட்ட துணைஆளுநர் பரமேஸ்வரன் முன்னிலை வகித்தார். மாவட்ட புரவலர் விநாயகா ஜி ரமேஷ் பேரணியை துவக்கி வைத்தார்.

பேரணியில் முன்னாள் துணைஆளுநர்கள் முத்து செல்வம், சீனிவாசன், பாபு மற்றும் ரோட்டரி உறுப்பினர்கள் பூல் பாண்டி, கண்ணன் கருப்பசாமி, மணி, கிருஷ்ணசாமி, நடராஜன் மற்றும் ரோட்டரி உறுப்பினர் அனைவரும் கலந்து கொண்டனர்.. பொருளாளர் நாராயணசாமி நன்றி கூறினார்.







