கோவில்பட்டியில் இன்று மாலை 3 மணி முதல் இரவு 9 மணி வரை பஸ் போக்குவரத்து மாற்றம்
முன்னாள் முதல் அமைச்சரும் அதிமுக போதுசெய்லாலருமான. எடப்பாடி பழனிச்சாமி” ‘மக்களை காப்போம் , தமிழகத்தை மீட்போம் ‘ என்ற பிரசாரத்தை மேற்கொண்டுள்ளார்.
கோவில்பட்டியில் இந்த பிரசாரத்தை இன்று வெள்ளிக்கிழமை மாலை ரோடு ஷோ நடத்துகிறார். பஸ் நிலையம் அருகே பிரசார கூட்டத்தில் பேசுகிறார்.

இதையொட்டி மாலை 3.30 மணி முதல் இரவு 9மணி வரை பொது போக்குவரத்து கீழ் கண்டவாறு மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
மதுரை, சிவகாசி, விருதுநகர், இராஜபாளையம், கழுகுமலை, திருநெல்வேலி, சங்கரன்கோவில், செங்கோட்டை நாகர்கோவில், கயத்தாறு, வெள்ளாளங்கோட்டை செல்லும் பஸ்கள் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்டு செல்லும்.
திருச்செந்தூர், தூத்துக்குடி, அருப்புக்கோட்டை, விளாத்திகுளம், புதியம்புத்தூர், குருமலை, கடம்பூர், இருக்கன்குடி, சாத்தூர் செல்லும் பஸ்கள் செண்பகவல்லி அம்மன் கோவில் பின்புறம் உள்ள காந்தி மைதானத்திலிருந்து கிளம்பும். ,

விளாத்திகுளம் to திருநெல்வேலி தூத்துக்குடி to ராஜபாளையம்,தூத்துக்குடி to சங்கரன்கோவில், தூத்துக்குடி to விருதுநகர், திருச்செந்தூர் to ராஜபாளையம் பஸ்கள் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகே பஸ் நிறுத்தம் மற்றும் புது ரோடு பகுதிகளில் பயணிகளை இறக்கிவிட்டு, தோட்டிலோவன்பட்டி சோதனை சாவடி வழியாக புதிய பேருந்து நிலையத்திற்கு சென்று அங்கு பயணிகளை ஏற்றி செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சிற்றுந்து *வழித்தடம் :-
சிற்றுந்துகளை பொறுத்தமட்டில் தெற்கு திட்டங்குளம், வடக்கு திட்டங்குளம், லிங்கம்பட்டி, கோழிப்பண்ணை, கூசாலிப்பட்டி, புதுகிராமம், இழுப்பையூரணி, வேலாயுதபுரம், மந்திதோப்பு, நாடார் ஸ்கூல், பல்லக்கு ரோடு, முத்து நகர்,
கிழவிபட்டி, செண்பகபேரி, தோட்டிலோவன்பட்டி, ஆகிய சிற்றுந்துகள் ” எட்டையபுரம் ரோடு ஊராட்சி மன்ற அலுவலகம்” முன்பாக இருந்து இயக்கப்படும்.
ஆலம்பட்டி தோணுகால், முடுக்கு மீண்டான் பட்டி கிருஷ்ணா நகர், அய்யனேரி, புளியங்குளம் ஆகிய வழித்தடங்கள் பஸ்கள் இளையரசனேந்தல் ரோடு EB ஆபிஸ் முன்பாக இருந்து இயக்கப்படும்.







