ரோட்டரி சங்க புதிய உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாம்
கோவில்பட்டி ரோட்டரி சங்கம் சார்பில் புதிய உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாம் சவுபாக்கியா மகாலில் நடந்தது.
பயிற்சி முகாமிற்கு ரோட்டரி சங்க தலைவர் ராஜ்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட புரவலர் விநாயகா ரமேஷ், மாவட்ட உதவி ஆளுநர் பரமேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் பழனிகுமார் அனைவரையும் வரவேற்றார்.

ரோட்டரி மாவட்ட முன்னாள் ஆளுநர் ஷேக் சலீம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புதிய உறுப்பினர் வாசனுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்து ரோட்டரி சங்கத்தின் தோற்றம் மற்றும் செயல்பாடுகள் குறித்து பயிற்சி அளித்தார்.

ரோட்டரி மாவட்ட முன்னாள் உதவி ஆளுநர்கள் முத்துச்செல்வம், சீனிவாசன், பாபு,ஆசியாபார்ம்ஸ் பாபு,உள்ளிட்ட முன்னாள் தலைவர்கள், சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் பொருளாளர் நாராயணசாமி நன்றி கூறினார்.







