`தமிழ்நாடு நாள்’: பள்ளி மாணவ, மாணவிகளுக்கான கட்டுரை, பேச்சுப் போட்டிகள்-ஆட்சியர் இளம்பகவத்
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் வெளியிட்ட செய்திக்குறிப்பில்கூறப்பட்டு இருப்பதாவது:-
“தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் தாய்த் தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு என பேரறிஞர் அண்ணா பெயர் சூட்டிய சூலை 18ஆம் நாளினையே “தமிழ்நாடு நாள் விழாவாக” இனி கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வறிவிப்பின் படி தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பள்ளி மாணவர்களுக்குக் கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டிகள் நடத்தி பரிசு மற்றும் பாராட்டுச்சான்றிதழ் வழங்கப்பெற உள்ளன.

இதன்படி தமிழ்நாடு நாள் விழாவினை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் 4.7.2025 வெள்ளிக்கிழமை அன்று தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவர்களுக்கு தூத்துக்குடி கோரம்பள்ளம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் வைத்து கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டிகள் நடத்தப்பெற உள்ளன.
கட்டுரை போட்டிகள்
1. ஆட்சிமொழி வரலாற்றில் கீ. இராமலிங்கம்,
2. பன்மொழிப் புலவர் கா. அப்பாதுரையாரின் தமிழ் ஆட்சிச் சொல் பணி ஆகிய தலைப்புகளில் நடைபெறும்.

பேச்சு போட்டிகள்
1. கடமை, கண்ணியம், கட்டுப்பாடு
2. அன்னைத் தமிழே ஆட்சிமொழி
3. தொன்றுதொட்டு தமிழ்நாடு எனும் பெயர்
4. அறிஞர் அண்ணா கண்ட தமிழ்நாடு
5. ஆட்சிமொழி விளக்கம்
6. தமிழ்நாடு எனப் பெயர் சூட்டிய நிகழ்வு
7. ஆட்சிமொழி – சங்க காலம் தொட்டு
8. இக்காலத்தில் ஆட்சிமொழி ஆகிய தலைப்புகளில் நடைபெறும்.
போட்டியில் வெற்றி பெறும் பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.10,000/- இரண்டாம் பரிசு ரூ.7,000/- மூன்றாம் பரிசு ரூ.5,000/-வீதம் வழங்கப்பெறும்
இவ்வாறு மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார்.







