கோவில்பட்டி லாயல் மில் காலனி பகுதியில் பயணியர் நிழற்குடை திறப்பு
கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியம் இலுப்பையூரணி பஞ்சாயத்திற்கு உட்பட்ட லாயல்மில் காலனி பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதி ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக பயணியர் நிழற்குடை கட்டப்பட்டது. இதன் திறப்பு விழா நடந்தது.

நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ பயணியர் நிழற்குடையை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.

நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துக்குமார், அதிமுக மத்திய ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி ,நகரச் செயலாளர் விஜயபாண்டியன், ஒன்றிய செயலாளர்கள் அழகர்சாமி,போடுசாமி, அன்புராஜ்,மாவட்ட வர்த்தக அணி செயலாளர் ராமர், மகளிர் அணி செயலாளர் பத்மாவதி,இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் கவியரசன், நகர்மன்ற உறுப்பினர்கள் செண்பகமூர்த்தி, வள்ளியம்மாள் மாரியப்பன்,மத்திய ஒன்றிய துணைச் செயலாளர் முருகன்,அதிமுக நிர்வாகிகள் மாரிமுத்துபாண்டியன், வெற்றி,பிச்சைமுத்து, விஜயகுமார்,முருகன்,மாரிமுத்து பழனிச்சாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.







