• June 6, 2025

அகில இந்திய ஆக்கி : கோவில்பட்டி அணி 3 வது வெற்றியை ருசித்தது

 அகில இந்திய ஆக்கி : கோவில்பட்டி அணி 3 வது வெற்றியை ருசித்தது

கோவில்பட்டி செயற்கை புல்வெளி மைதானத்தில் இலட்சுமி அம்மாள் நினைவுக் கோப்பைக்கான 14 வது அகில இந்திய ஆக்கிப் போட்டிகள் கடந்த 23ம் தேதி முதல்  நடைபெற்று வருகிறது.

போட்டியின் ஐந்தாம் நாளான நேற்றுமாலை 5மணியளவில் நடைபெற்ற 18வது லீக் போட்டியில் நியூடெல்லி பஞ்சாப் நேஷனல் வங்கி அணியும், புபனேஸ்வர் நிஸ்வாஸ் ஹாக்கி கழக அணியும் மோதின.

இப்போட்டியில் நியூடெல்லி பஞ்சாப் நேஷனல் வங்கி அணி வீரர்கள் அபிமன்யூ  10வது மற்றும் 48வது நிமிடத்தில் (பீல்டு கோல்), குருசிம்ரன் சிங் 14வது நிமிடத்தில் (பெனால்டி கார்னர்), ஷிவ்தீப் 26வது நிமிடத்தில் (பீல்டு கோல்), நவீன் அன்டில்   49வது நிமிடத்தில்  (பீல்டு கோல்) மற்றும் விஷால் அன்டில் 52வது நிமிடத்தில் (பீல்டு கோல்) மொத்தம் 6 கோல்கள் அடித்து அசத்தினார்கள்.

புபனேஸ்வர் நிஸ்வாஸ் ஹாக்கி கழக அணி வீரர் ரித்திக் லக்ரா 20வது நிமிடத்தில்  பீல்டு கோல் முறையில் ஒரு கோல்  அடித்தார். அதற்கு மேல் ஒரு கோல் கூட போட முடியாமல் திணறினார்கள். இறுதியில் 6:1 என்ற கோல் கணக்கில் நியூடெல்லி பஞ்சாப் நேஷனல் வங்கி அணி வெற்றி பெற்றது.

சுரேஷ் குமார் மற்றும் அஸ்லாம் ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டனர். சிறந்த ஆட்டக்காரர் விருது நியூடெல்லி பஞ்சாப் நேஷனல் வங்கி அணி வீரர் அபிமன்யூ-க்கு வழங்கப்பட்டது.

மாலை 6.30 மணியளவில் நடைபெற்ற 19வது லீக் போட்டியில் சென்னை அக்கவுண்டெண்ட் ஜெனரல் ஆபீஸ் ரெக்கிரியேஷன் கிளப் ஹாக்கி அணியும், மும்பை யூனியன் வங்கி அணியும் மோதின.

இதில் 2:0 என்ற கோல் கணக்கில் மும்பை யூனியன் வங்கி அணி வெற்றி பெற்றது.

மும்பை யூனியன் வங்கி அணி வீரர்கள் தேஜாஸ் சவுஹான் 30வது நிமிடத்தில் (பீல்டு கோல்) மற்றும் தேஜாஸ் பூவையாஹ் 49வது நிமிடத்தில் (பீல்டு கோல்) மொத்தம் 2 கோல்கள் அடித்து அணிக்கு வெற்றியை தேடி தந்தனர்.

பாலாஜி குமார் மற்றும் அஜித் குமார் ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டனர். சிறந்த ஆட்டக்காரர் விருது மும்பை யூனியன் வங்கி அணி வீரர் ப்ரதீக் சோலன்கி-க்கு வழங்கப்பட்டது.

கோவில்பட்டி அணிக்கு 3வது வெற்றி

இரவு 8 மணியளவில் நடைபெற்ற 20வது லீக் போட்டியில் கோவில்பட்டி எஸ்.டி.ஏ.டி எக்ஸலன்ஸ் ஹாக்கி அணியும், கர்நாடகா ஹாக்கி பெல்லாரி அணியும் சந்தித்தன.

இப்போட்டியில் கோவில்பட்டி எஸ்.டி.ஏ.டி எக்ஸலன்ஸ் ஹாக்கி அணி வீரர்கள் முருகேசன் 20வது நிமிடத்தில் (பெனால்டி ஸ்டோக்),  கிருஷ்ணன் 39வது நிமிடத்தில் (பெனால்டி கார்னர்) மற்றும் முரளி கிருஷ்ணன் 43வது நிமிடத்தில் (பெனால்டி கார்னர்) என மொத்தம் 3 கோல்கள் அடித்தனர். 

கோவில்பட்டி அணியினரின் அபார ஆட்டத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் கர்நாடகா அணியினர் திணறினார்கள். ஒரு கட்டத்தில் கர்நாடகா ஹாக்கி பெல்லாரி அணி வீரர் அர்ஜுன் ரெட்டி 60வது நிமிடத்தில்  பீல்டு கோல் முறையில் ஒரு கோல்  அடித்தார்.

இறுதியில் வெற்றிக்கனி கோவில்பட்டி அணிக்கே கிடைத்தது. 3:1 என்ற கோல் கணக்கில் கோவில்பட்டி எஸ்.டி.ஏ.டி எக்ஸலன்ஸ் ஹாக்கி அணி வெற்றி பெற்றது. ஏற்கனவே 2 போட்டிகளில் வென்றுள்ள கோவில்பட்டி 3வது வெற்றியை ருசித்தது.

சரவணன் மற்றும் ராஜீவ் ரத்தன் ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டனர். சிறந்த ஆட்டக்காரர் விருது கோவில்பட்டி எஸ்.டி.ஏ.டி எக்ஸலன்ஸ் ஹாக்கி அணி வீரர் முரளி கிருஷ்ணன்-க்கு வழங்கப்பட்டது.

)

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *