• October 22, 2026

வங்கதேச இந்து தலைவர் கைது விவகாரம்: மத்திய அரசு நடவடிக்கை எடுக்க மம்தா பானர்ஜி வலியுறுத்தல்

 வங்கதேச இந்து தலைவர் கைது விவகாரம்: மத்திய அரசு நடவடிக்கை எடுக்க மம்தா பானர்ஜி வலியுறுத்தல்

வங்கதேச இந்து தலைவர் சின்மோய் கிருஷ்ண தாஸ் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், நாங்கள் மத்திய அரசோடு இருக்கிறோம் என்றும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மேற்கு வங்க சட்டப்பேரவையில் பேசிய மம்தா பானர்ஜி, “எந்த மதமும் பாதிக்கப்படுவதை நாங்கள் விரும்பவில்லை. வங்கதேசத்தில் இஸ்கான் அமைப்பின் மூத்த துறவி சின்மோய் கிருஷ்ண தாஸ் கைது செய்யப்பட்டதை அடுத்து, இஸ்கான் அமைப்பினருடன் பேசினேன். இது வேறு ஒரு நாட்டின் விவகாரம். எனவே, இதில் மத்திய அரசு தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த பிரச்சினையில் நாங்கள் அவர்களுடன் (மத்திய அரசு) இருக்கிறோம்” என குறிப்பிட்டார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஜம்மு காஷ்மீரின் முன்னாள் காவல்துறை தலைவர் எஸ்.பி.வைத் கூறியதாவது:- ஓய்வுபெற்ற நீதிபதிகள், ராணுவ உயர் அதிகாரிகள், ஐஏஎஸ் அதிகாரிகள், வனத்துறை அதிகாரிகள் உள்பட சுமார் 75 பேர் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளோம். வங்கதேசத்தில் இந்துக்கள் அட்டூழியங்களை எதிர்கொள்கிறார்கள். இது தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.

இது வங்கதேசத்தை மட்டும் பாதிக்காது. அதை சுற்றியுள்ள பிராந்தியத்திலும் இது பாதிப்பை ஏற்படுத்தும். இது இந்தியாவில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். மொத்த பிராந்தியத்திலும் இது சிக்கலை ஏற்படுத்தும். இது ஒரு நாட்டின் உள்விவகாரம் அல்ல. எனவே, இது குறித்து ஐ.நா. மற்றும் சர்வதேச அமைப்புகளில் முறையிட வேண்டும். பிரதமர் மோடி ஒரு உலக தலைவர். எனவே, அவர் இதில் தலையிட வேண்டும். வங்கதேசத்தில் உள்ள சிறுபான்மையினரை பாதுகாக்கும் நடவடிக்கைகளை அந்நாட்டு அரசு எடுக்க வேண்டும். இதற்கு வெளியில் இருந்து உரிய அழுத்தம் கொடுக்கப்பட வேண்டும்.” இவ்வாறு கூறினார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *