• June 7, 2025

ரஜினிகாந்த் சினிமாவில் சூப்பர் ஸ்டார், நான் அரசியலில் சூப்பர் ஸ்டார்: சீமான்

 ரஜினிகாந்த் சினிமாவில் சூப்பர் ஸ்டார், நான் அரசியலில் சூப்பர் ஸ்டார்: சீமான்

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்தது பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ரஜினியுடனான சந்திப்பு குறித்து சீமான் பேசியுள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் மாவீரர் நினைவு தின நிகழ்ச்சி நேற்று முன் தினம் நடைபெற்ற நிலையில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அதில் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது சீமான் பேசியதாவது:- நானும் ரஜினிகாந்தும் இரண்டே கால் மணி நேரம் சந்தித்து பேசியது எங்கள் 2 பேருக்கு தான் தெரியும். அந்த இரண்டே கால் மணி நேரமும் என்ன பேசினோம் என்பதும் எங்கள் 2 பேருக்கு மட்டும்தான் தெரியும்.

புத்தகம் வெளியிடணும். பாட்டு வெளியிடணுமா எல்லாத்துக்கும் அவரை கூப்பிட்டு வெச்சிக்கணும் அவர்களுக்கு. ஆனால் நான் ஒரு முறைதான் சந்தித்தேன். அதற்கே அய்யோ. அய்யோ என கூச்சலிடுகிறார்கள். ஏனென்றால் அவர் சினிமாவில் சூப்பர் ஸ்டார், நான் அரசியலில் சூப்பர் ஸ்டார். 2 சூப்பர் ஸ்டார்களும் சந்தித்ததில் அவர்களுக்கு பயம் வந்துவிட்டது. இவ்வாறு சீமான் பேசியுள்ளார்.

2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் ரஜினியுடனான சீமானின் இந்த சந்திப்பு எந்த விதமான விளைவுகளை ஏற்படுத்தும் என்ற பரபரப்பு எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *