மோடியின் மிரட்டலுக்கு பயந்து இஸ்லாமிய மக்களை ஏமாற்றுகிறார் ஸ்டாலின்; முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார்
இஸ்லாமிய மக்களுக்கு அளிக்கப்பட்டு வரும் இட ஒதுக்கீட்டை ஏழு சதவீதமாக உயர்த்தி தர வேண்டும், தேர்தல் நேரத்தில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ள இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்வதாக அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி எஸ் டி பி ஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் தலைமையில் சென்னை எழும்பூரில் பேரணி நடைபெற்றது.
எல்.ஜி. சாலையில் தொடங்கிய இந்த பேரணி ராஜரத்தினம் விளையாட்டரங்கம் அருகே நிறைவடைந்தது. பின்னர் நடைபெற்ற கண்டன உரை நிகழ்ச்சியில் அதிமுக சார்பில் கழக அமைப்பு செயலாளரும் முன்னாள் அமைச்சருமான டி.ஜெயக்குமார் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-
மத்தியில் பாசிச ஆட்சி நடத்தி வரும் பாஜக அரசு ஆட்சிக்கு வந்த நாள் முதல் இஸ்லாமிய மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளை தொடர்ந்து செய்து வருகிறது.. மத்தியில் பாசிச ஆட்சி நடத்தி வரும் பிரதமர் மோடியை, தமிழகத்தில் பாசிச ஆட்சி நடத்தி வரும் முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் சந்தித்து விட்டு வந்த நாள் முதல் அவரது செல்ல பிள்ளையாகவே மாறிவிட்டார்.
தமிழகத்திலிருந்து 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் திமுக சார்பில் இருந்தும், இந்திய அளவில் இஸ்லாமிய மக்களுக்கான இட ஒதுக்கீட்டை உயர்த்தி தருவது குறித்து இதுவரை ஒரு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட குரல் கொடுக்காதது ஏன் ?
எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும்பொழுது ஒரு நிலை, ஆளும்கட்சியான பிறகு ஒரு நிலை என இரட்டை வேடம் போடும் கட்சி திமுக. இரட்டை வேடம் போடும் தலைவர் ஸ்டாலின் தான் =
2006 ஆம் ஆண்டு முதலமைச்சராக ஜெ.ஜெயலலிதா இருந்த போது தான் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அளிக்க வேண்டிய இட ஒதுக்கீடு குறித்து ஓய்வுபெற்ற நீதியரசர் ஜனார்தனன் தலைமையிலான கமிட்டி அமைக்கப்பட்டு இஸ்லாமியர்களுக்கான 3.5 விழுக்காடு இட ஒதுக்கீடு பரிந்துரைக்கப்பட்டது. அதற்கடுத்த தேர்தலில் ஆட்சிக்கு வந்த திமுக அதனை நடைமுறைப்படுத்தியது