• November 15, 2024

பெண் தொழிலாளர்களுக்கு இலவச சட்ட ஆலோசனை

 பெண் தொழிலாளர்களுக்கு இலவச சட்ட ஆலோசனை

கோவில்பட்டி இலுப்பையூரணியில்   தேசிய சட்ட சேவை  தினத்தை முன்னிட்டு சென்னை பையனூரில் அமைந்துள்ள விநாயகா மிஷன் சட்ட கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இலவச சட்ட ஆலோசனை முகாம் நடத்தினார்கள்.

100 க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு இலவச சட்ட விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டத. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் வேலை செய்யும் பெண்களுக்கு ஏற்படும் குறைகள் மற்றும் அரசின் சமூக நலத்திட்டங்கள் குறித்தும் அவர்களுக்கு சட்ட விழிப்புணர்வு ஆலோசனை வழங்கப்பட்டது.

பொதுமக்களுக்கும் கிராமப்புற மக்களுக்கும் உள்ள சமூக பிரச்சினைகளை எவ்வாறு எதிர்கொள்வது என்று பேராசிரியர்கள் ஆலோசனை வழங்கினார்கள்.

இந்நிகழ்ச்சியில் இலுப்பையூரணி வார்டு உறுப்பினர் வெற்றி சிகாமணி, கார்த்திகா தேவி, சட்ட கல்லூரி பேராசிரியர் பவுமினா, மெர்லின் ஸ்டீபன், மாணவர்கள் மகேந்திரன்,வேட்டை செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர்…

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *