• November 14, 2024

கோவில்பட்டி, சுற்றுவட்டார பகுதிகளில்  16-ம் தேதி  மின் தடை

 கோவில்பட்டி, சுற்றுவட்டார பகுதிகளில்  16-ம் தேதி  மின் தடை

கோவில்பட்டி மின்வாரிய செயற்பொறியாளர் (பொறுப்பு) எஸ்.குருசாமி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

 கோவில்பட்டி கோட்ட மின்வாரிய உபமின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் வருகிற 16-ம் தேதி (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. இதன் காரணமாக கீழ்க்கண்ட துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2  மணி வரை மின்சப்ளை தடை செய்யப்படும். இடங்கள் வருமாறு:-

கழுகுமலை உபமின் நிலையம்: கழுகுமலை, குமராபுரம், வேலாயுதபுரம், கரடிகுளம், சி.ஆர்.காலனி, வெள்ளப்பநேரி, குருவிகுளம்,

 கோவில்பட்டி உபமின் நிலையம் : கோவில்பட்டி, புதுக்கிராமம், இலுப்பையூரணி, வேலாயுதபுரம், சங்கரலிங்கபுரம், லாயல்மில் பகுதி, லட்சுமிமில் பகுதி, முகமதுசாலியாபுரம், ஆலம்பட்டி, இனாம்மணியாச்சி, தொனுகால், படர்ந்தபுளி.

எப்போதும்வென்றான் உபமின் நிலையம் : எப்போதும்வென்றான், எட்டயபுரம், கீழமுங்கலம், பசுவந்தனை, நாகலாபுரம், கடம்பூர், ஒட்டநத்தம், குளத்தூர், சூரங்குடி,

விஜயாபுரி உபமின் நிலையம் : திட்டங்குளம், பாண்டவர்மங்கலம், ஈராச்சி, விஜயாபுரி, கசவன்குன்று, துறையூர், காமநாயக்கன்பட்டி, மந்தித்தோப்பு, ஊத்துப்பட்டி, குருமலை, வேப்பன்குளம், மும்மலைப்பட்டி,

சிட்கோ உபமின் நிலையம் :முத்துநகர், சிட்கோ, கணேஷ்நகர், தங்கப்பன்நகர், ஜோதிநகர், புதுரோடு,

செட்டிகுறிச்சி உபமின் நிலையம் : செட்டிகுறிச்சி, சிதம்பரம்பட்டி, கட்டாலங்குளம், வெள்ளாளன்கோட்டை, ஓலைகுளம், திருமங்கலக்குறிச்சி, பெரியசாமிபுரம், மூர்த்திஸ்வரபுரம்,

 சன்னதுபுதுக்குடி உபமின் நிலையம் : கயத்தாறு பேரூராட்சி பகுதிகள், ராஜாபுதுக்குடி, டி.என்.குளம், ஆத்திகுளம், தெற்கு இலந்தைகுளம், வடக்கு இலந்தைகுளம், சாலைபுதூர், மு.கைலாசபுரம், கீழக்கோட்டை, கொடியன்குளம், என்.புதூர், நாரைக்கிணறு, புளியம்பட்டி, சவலாப்பேரி, ஆலந்தா ஒரு பகுதி, பிராஞ்சேரி, இத்திகுளம், வடக்கு செழியநல்லூர், காங்கீஸ்வரன்புதூர், குப்பணாபுரம், பருத்திகுளம், சன்னதுபுதுக்குடி, வடகரை மற்றும் கற்றாலை மின்தொடர் 1, 2 ஆகிய பகுதிகளில் மின் தடை செய்யப்படும்.

இவ்வாறு செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *