• November 14, 2024

கங்குவா படத்திற்கு கடைசி நேரத்தில் வந்த சிக்கல்: படத்திற்கு நிபந்தனை விதித்த ஐகோர்ட்

 கங்குவா படத்திற்கு கடைசி நேரத்தில் வந்த சிக்கல்: படத்திற்கு நிபந்தனை விதித்த ஐகோர்ட்

சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் `கங்குவா’. மிக பிரமாண்டமான பொருள்செலவில் வரலாற்று புனைவாக உருவாகியுள்ள ‘கங்குவா’ திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்பட 10 மொழிகளில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் நடிகர் சூர்யாவுடன் இணைந்து திஷா பதானி, பாபி தியோல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

இத்திரைப்படம் நவம்பர் 14-ம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் படக்குழுவினர் புரொமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் 20 கோடி ரூபாயை வரும் 13-ம் தேதிக்குள் உயர்நீதிமன்ற சொத்தாட்சியருக்கு செலுத்தாமல் ‘கங்குவா’ படத்தை வெளியிட கூடாது என்று ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்துக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டிருக்கிறது.

கங்குவா படத்துக்கு பைனான்ஸ் கொடுத்த அர்ஜுன் லால் என்பவர் மரணமடைந்துவிட்டார். அவரது சொத்துக்கள் ஐகோர்ட்டின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. அவரிடம் கடன் வாங்கியவர்களிடம் வசூலிக்கும் பணிகளையும் நீதிமன்ற சொத்தாட்சியார் செய்து வருகிறார். அவரிடம் இருந்து ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் கடன் வாங்கி இருக்கிறது.

அந்த கடன் 20 கோடி ரூபாயை வரும் 13-ம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டு இருக்கின்றனர். அதை செலுத்தாமல் கங்குவா படத்தை ரிலீஸ் செய்ய கூடாது என்றும் தெரிவித்து இருக்கின்றனர். இதனால் கடைசி நேரத்தில் ‘கங்குவா’ படத்திற்கு சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *