• June 8, 2025

சாய் பல்லவி நடிக்கும் ‘ராமாயணம்’ படத்தின் ரிலீஸ் தேதி: படகுழு அறிவிப்பு

 சாய் பல்லவி  நடிக்கும் ‘ராமாயணம்’ படத்தின் ரிலீஸ் தேதி: படகுழு அறிவிப்பு

நிதிஷ் திவாரி இயக்கத்தில் ராமாயணம் கதையை மையமாக வைத்து தயாராகும் ‘ராமாயணம்’ படத்தில் ராமராக ரன்பீர் கபூர், சீதையாக சாய் பல்லவி ஆகியோர் நடிக்கின்றனர். கன்னட நடிகர் யாஷ் ராவணனாக வருகிறார். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.

இந்த படத்தில் அனுமானாக சன்னி தியோல், கும்பகர்ணனாக பாபிதியோல் ஆகியோர் நடிக்கின்றனர். ரூ.1,000 கோடி பட்ஜெட்டில் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் இப்படத்தை உருவாக்குகின்றனர். படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும்நிலையில், அதிலிருந்து சில புகைப்படங்கள் ஏற்கனவே வலைதளத்தில் கசிந்து வைரலாகின.

இப்படம் மூன்று பாகங்களாக உருவாக இருப்பதாக கூறப்பட்டநிலையில், தற்போது இப்படத்தின் 2 பாகங்களில் ரிலீஸ் தேதியை படகுழு அறிவித்துள்ளது.

அதன்படி, முதல் பாகம் 2026-ம் ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என்றும் 2-ம் பாகம் 2027-ம் ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என்றும் படகுழு போஸ்டர் வெளியிட்டு தெரிவித்துள்ளது.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *