• June 8, 2025

சப் ஜூனியர் பெண்கள் ஆக்கி அணி தேர்வு கோவில்பட்டியில் புதன்கிழமை நடக்கிறது

 சப் ஜூனியர் பெண்கள் ஆக்கி அணி தேர்வு கோவில்பட்டியில் புதன்கிழமை  நடக்கிறது

ஆக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு மற்றும் ஆக்கி யூனிட் ஆப் திருநெல்வேலி இணைந்து நடத்தும் மாநில அளவிலான சப் ஜூனியர் பெண்கள் சாம்பியன் போட்டி திருநெல்வேலியில் நவம்பர் 9 முதல் 12 ந்தேதி வரை அண்ணா விளையாட்டரங்கில் நடக்கிறது,.

இப் போட்டியில் தூத்துக்குடி மாவட்ட சப் ஜூனியர் பெண்கள் ஆக்கி அணி  கலந்துகொண்டு விளையாட இருப்பதால் மாவட்ட ஆக்கி அணி தேர்வு கோவில்பட்டி காமராஜ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நாளை மறுநாள் (புதன்கிழமை )மாலை 4 மணி அளவில் நடைபெற இருக்கிறது.

இதில்  கலந்து கொள்ளும் வீராங்கனைகள் தூத்துக்குடி மாவட்டத்தைச் சார்ந்தவராகவும் அல்லது தூத்துக்குடி மாவட்டத்தில் ஏதாவது ஒரு பள்ளியில் பயின்று வருபவராகவும் இருக்க வேண்டும் 1.1.2008 க்கு பின் பிறந்தவராக  இருக்க வேண்டும் தேர்வுக்கு வரும் வீராங்கனைகள் பள்ளியின் அடையாள அட்டை, ஆதார் நகல் , மற்றும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மதிப்பெண் சான்றிதழ் நகல் கொண்டு வரவேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *