இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட்: நியூசிலாந்து 259 ரன்களுக்கு ஆல் அவுட்
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. முதலாவது டெஸ்டில் நியூசிலாந்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தியா- நியூசிலாந்து அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி மராட்டிய மாநிலம் புனேவில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் அனைத்தும் விக்கெட்டுகளையும் இழந்து 259 ரன்கள் எடுத்துள்ளது.
நியூசிலாந்து அணியில் அதிகபட்சமாக டிவான் கான்வே 76 ரன்கள் எடுத்தார்.இந்திய அணியில் சிறப்பாக பந்து வீசிய வாஷிங்டன் சுந்தர் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். அஸ்வின் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தற்போது இந்திய அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியுள்ளது.