தூத்துக்குடி மாப்பிள்ளையூரணியில் ஆட்டு சந்தை;அமைச்சர் கீதாஜீவன் 3 ஆடுகள் வாங்கி தொடங்கி வைத்தார்
தூத்துக்குடி மாவட்டத்தில் ஆட்டுச் சந்தைகள் தூத்துக்குடி, எட்டையாபுரம், மற்றும் புதியம்புத்தூர், நாசரேத், ஏரல் ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வருகிறது.
.இந்நிலையில் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சி இசிஆர் சாலை கோமஸ்புரம் பகுதியில் நடைபெற்ற ஆட்டு சந்தை நிறுவப்பட்டு திறப்பு விழா நடைபெற்றது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் வசுமதி அம்பாசங்கர் தலைமை தாங்கினார்.
தெற்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் அம்பாசங்கர் வரவேற்று பேசினார். இச்சந்தையை அமைச்சர் கீதாஜீவன் ரிப்பன் வெட்டி, குத்து விளக்கு ஏற்றி வைத்து தொடங்கிவைத்தார்.
தொடர்ந்து ஆட்டு வியாபாரிகளை ஊக்கப்படுத்தும் விதமாக சந்தையில் ரூ 8500, ரூ.10,500, ரூ.11,000 விலையில் 3 ஆடுகளை (கிடாக்களை) விலைக்கு ஆடுகளை வாங்கினார்.
சுமார் ஒன்றரை ஏக்கரில் ஆரம்பிக்கப்பட்டுள்ள சந்தை வாரந்தோறும் புதன் மற்றும் வெள்ளிக்கிழமை ஆகிய இரண்டு நாட்கள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் நாளில் ஏராளமான வியாபாரிகள் ஆடு, கோழி, சேவல் போன்றவற்றை சந்தைக்கு கொண்டு வந்து விற்பனையில் ஈடுபட்டனர்.