• June 8, 2025

அமெரிக்க அதிபர் தேர்தல்: கமலா ஹாரிஸ்க்கு நன்கொடை கொடுத்த பில் கேட்ஸ்

 அமெரிக்க அதிபர் தேர்தல்: கமலா ஹாரிஸ்க்கு நன்கொடை கொடுத்த பில் கேட்ஸ்

அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 5-ல் நடைபெற உள்ளது. ஜனநாயக கட்சி சார்பில் துணை அதிபர் கமலா ஹாரிசும் (வயது 60), குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டிரம்பும் களமிறங்க உள்ளனர். கருத்துக்கணிப்புகளில் கமலா ஹாரிசுக்கு, அதிக செல்வாக்கு இருப்பது தெரியவந்துள்ளது. தேர்தலுக்கு இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில் கமலா ஹாரிசும், டிரம்பும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் கமலா ஹாரிசுக்கு தொழிலதிபர் பில்கேட்ஸ் ஆதரவு தெரிவித்துள்ளார். அவர் கமலாவுக்கு 50 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட ரூ.420 கோடி) நன்கொடை அளித்துள்ளார். என்று நியூ யார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

சுகாதாரத்தை மேம்படுத்துதல், வறுமையை குறைத்தல் மற்றும் அமெரிக்காவிலும் உலகெங்கிலும் உள்ள காலநிலை மாற்றத்தை எதிர்த்து போராடுவதிலும் அர்ப்பணிப்போடு இருக்கும் அதிபர் வேட்பாளரை நான் ஆதரிக்கிறேன் என்று பில் கேட்ஸ் தெரிவித்துள்ளார்.

அதே சமயம் உலகின் நம்பர் 1 பணக்காரரான எலான் மஸ்க்., டிரம்பிற்கு ஆதரவு அளித்து வருகிறார்.

ஆசிய-அமெரிக்கர்கள் மத்தியில் ஜனநாயக கட்சிக்கு ஆதரவு அதிகம் தென்படுகிறது. இவர்களில் 46% பேர் பைடனுக்கு ஓட்டளிக்க விருப்பம் தெரிவித்தனர். அவர் தேர்தல் களத்தில் இருந்து விலகி, கமலா ஹாரிஸ் களம் இறங்கிய நிலையில், அவருக்கு ஓட்டளிக்க விரும்புவோர் சதவீதம் 64 ஆக அதிகரித்துள்ளது. என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *