லாரன்ஸ் பிஷ்னோயை சுட்டு கொன்றால் ரூ.1 கோடி பரிசு: கர்னி சேனை

 லாரன்ஸ் பிஷ்னோயை சுட்டு கொன்றால் ரூ.1 கோடி பரிசு: கர்னி சேனை

சிறையில் இருக்கும் லாரன்ஸ் பிஷ்னோயை சுட்டு கொலை செய்தால் ஒரு கோடி பரிசு வழங்குவதாக கர்னி சேனையின் தலைவர் ராஜ் செகாவத் அவர்கள் அறிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் கொலைக்கு பொறுப்பேற்ற லாரன்ஸ் பிஷ்னோய் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை கொலை செய்யும் காவல்துறை அதிகாரிக்கு ரூ.1 கோடி வெகுமதி அளிப்பதாக கர்னி சேனை அமைப்பு அறிவித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுபற்றி கர்னி சேனையின் தேசிய தலைவர் ராஜ் செகாவத் கூறியபோது:-

“சிறையில் இருக்கும் லாரன்ஸ் பிஷ்னோயை கொலை செய்யும் எந்த காவல்துறை அதிகாரிக்கும் ரூபாய்.1,11,11,111 பரிசாக வழங்கப்படும்” என்றார்.

இந்த அறிவிப்பு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரங்கமாக வெளியிட்டுள்ளார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *