• June 8, 2025

அமித்ஷாவுக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய பிரதமர் மோடி

 அமித்ஷாவுக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய பிரதமர் மோடி

மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா தனது 60-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். இந்த நிலையில் அமித்ஷாவுக்கு, பிரதமர் மோடி மற்றும் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில்,

பிறந்தநாள் வாழ்துகள் அமித்ஷா ஜி. கடினமாக உழைக்கும் தலைவர் அமித்ஷா. பாஜகவை வலுப்படுத்த தனது வாழ்நாளை அர்ப்பணித்தவர். அவர் விக்சித் பாரதத்தின் பார்வையை நனவாக்க பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். அவரது நீண்ட ஆயுளுக்கும் ஆரோக்கியத்திற்கும் பிரார்த்திக்கிறேன்.என தெரிவித்துள்ளார்.

பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில்,

வளமான, வலிமையான பாரதத்தை உருவாக்க உறுதி கொண்டு மாண்புமிகு பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் தோளோடு தோள் நின்று உலக நாடுகள் பாராட்டும் வகையில்., தீராத காஷ்மீர் எல்லை பிரச்சனை முதல் கன்னியாகுமரி வரை அகண்ட பாரதத்தை அரசியல் சாணக்கியத்துடன் முன்னேற்றப்பாதையில் கொண்டு சென்ற எங்களின் வழிகாட்டி., பாரத தாயின் நம்பிக்கை நட்சத்திரம், மரியாதைக்குரிய மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
பூரண உடல் ஆரோக்கியத்தோடு நீண்ட ஆயுளுடன் மக்கள் பணியாற்ற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். என தெரிவித்துள்ளார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *