• June 9, 2025

வெளியானது அமரன் படத்தின் 2-வது பாடல்

 வெளியானது அமரன் படத்தின் 2-வது பாடல்

இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் ‘அமரன்’. இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார். சிவகார்த்திகேயன் இந்த படத்தில் ‘முகுந்தன்’ என்ற கதாபாத்திரத்தில் ராணுவ வீரராக நடித்துள்ளார். புவன் அரோரா, சுரேஷ் சக்கரவர்த்தி, ஸ்ரீகுமார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

பயங்கரவாதிகளை எதிர்த்து போராடி வீர மரணமடைந்த ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் கதையை மையமாக கொண்டு உருவாகியுள்ள ‘அமரன்’ திரைப்படம் வருகிற அக்டோபர் 31-ந் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ளது. உலக நாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.

சமீபத்தில் ‘ஹே மின்னலே’ பாடல் வெளியானது. இது இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷின் 700-வது பாடல் ஆகும். இப்பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில், அமரன் படத்தின் இரண்டாவது பாடல் ‘வெண்ணிலவு சாரல்’ தற்போது வெளியாகி இருக்கிறது. இப்பாடலும் அனைவரது மனதையும் கவர்ந்து வருகிறது. யுகபாரதி வரிகளில் வெண்ணிலவு சாரல் பாடலை கபில் கபிலன் மற்றும் ரக்ஷிதா சுரேஷ் இணைந்து பாடியுள்ளனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *