• June 6, 2025

கோவில்பட்டியில் ஆக்கி கிளப்  செயலாளர்கள், மூத்த வீரர்கள் ஆலோசனை கூட்டம்

 கோவில்பட்டியில் ஆக்கி கிளப்  செயலாளர்கள், மூத்த வீரர்கள் ஆலோசனை கூட்டம்

தூத்துக்குடி மாவட்ட அனைத்து கிளப்  

செயலாளர்கள் மற்றும் மூத்த வீரர்கள் சிறப்பு ஆலோசனை கூட்டம்  கோவில்பட்டி பயணியர் விடுதியில் நடைபெற்றது. பிளிப்ஸ் ஆக்கிகிளப் செயலாளர் கண்ணுசாமி வரவேற்புரை ஆற்றினார். 

பாண்டவர்மங்கலம் ஆக்கிகிளப் செயலாளர் மணிமாறன் தலைமை தாங்கினார். பூமாரி முருகேசன், அம்பேத்கர் ஆக்கிகிளப் செயலாளர் பிலிப்குமார்,கிருஷ்ணா ஆக்கிகிளப் பழவேசம்,யங்சேலஞ்சர்ஸ் ஆக்கிகிளப் செயலாளர் பசுபதி ஆகியோர் முன்னிலைவகித்தனர்.

கூட்டத்தில் மாவட்ட ஆக்கி லீக் போட்டிகள் நடத்திட மாநில நிர்வாத்திடம் ADHOC கமிட்டி அமைத்திட வேண்டி ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

மூத்த விளையாட்டு வீரர்கள் மற்றும் ஆக்கிகிளப் செயலாளர்கள் கலந்துகொண்டனர்,பாரதி ஆக்கிகிளப் செயலாளர் சந்தனராஜ் நன்றி கூறினார்

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *