தமிழகத்தில் 20 தொகுதிகளில் பாஜக போட்டி
நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியில் தொகுதி பங்கீடு முடிந்து விட்டது. ஒவ்வொரு கட்சிக்கும் எந்தெந்தத தொகுதிகள் என்பது மட்டும் இன்னும் முடிவு செய்யப்படவில்லை.’
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியதாவது:-
எங்கள் கூட்டணியில் தொகுதிப் பங்கீடு நிறைவு பெற்றுவிட்டது, பாஜக – 20, பாமக – 10 ,அமமுக – 2 ஐஜேகே – 1 , புதிய நீதிக்கட்சி – 1 தமாகா – 3, இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம் – 1, த.ம.மு.க.1 தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது.
4 தொகுதியில் பாஜக சின்னத்தில் கூட்டணி வேட்பாளர்கள் போட்டிஇடுவார்கள். 24 தொகுதி வேட்பாளர்களுடன் இன்று டெல்லி செல்கிறோம். ,மேலிட ஒப்புதலுக்கு பிறகு பாஜக வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள்.
இவ்வாறு அண்ணாமலை கூறினார்.







