திமுக கூட்டணியில் இருந்து விலகிய கட்சி அதிமுக அணியில் இணைந்தது
நடைபெற இருக்கும் தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மதிமுக கட்சிகளுக்கு தொகுதி பங்கீட்டில் சிக்கல் நீடித்து வருகிறது. இந்த நிலையில் அந்த அணியில் இருந்து அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி இன்று விலகியது.
இதை தொடர்ந்து அக்கட்சியின் பொதுசெயலாளர் கதிரவன் , அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து தங்கள் ஆதரவை தெரிவித்து அதிமுக கூட்டணியின் இணைந்தார்.
இதை தொடர்ந்து தேனி அல்லது ராமநாதபுரம் தொகுதி அக்கட்சிக்கு ஒதுக்கப்படலாம் என்று தெரிகிறது.