தூத்துக்குடி -கீழ வைப்பார் பஸ் சேவை தொடக்கம்
தூத்துக்குடி யில் இருந்து தருவைக்குளம், வேப்பலோடை,ஸ்ரீவைகுண்ட பெருமாள்புரம், இனாம்கல்லூரணி, கீழவைப்பார் செல்லும் பஸ் வழித்தடத்தை இன்றைய தினம் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர்.மார்கண்டேயன் இனாம்கல்லூரணி கிராமத்தில் கொடியசைத்து தொடக்கி வைத்தார்.
நிகழ்வில்போக்குவரத்துகழக தூத்துக்குடி பொது மேலாளர், கோட்ட மேலாளர், விளாத்திகுளம் கிளை மேலாளர் விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து தூத்துக்குடி வடக்கு மாவட்ட முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் இமானுவேல் வைப்பார் ஊராட்சி மன்ற தலைவர் சக்கம்மாள்ராமர் கிளைச் செயலாளர்கள் பேச்சிமுத்து,ராஜா,முருகேசன் ஒன்றிய வர்த்தக அணி அமைப்பாளர் பாலமுருகன் ஆதித்தன் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் உட்பட கழக நிர்வாகிகள் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.