காலநிலை மாற்றத்தின் சமூக விளைவுகள் குறித்த சர்வதேச மாநாடு; சவுமியா அன்புமணி பங்கேற்பு
![காலநிலை மாற்றத்தின் சமூக விளைவுகள் குறித்த சர்வதேச மாநாடு; சவுமியா அன்புமணி பங்கேற்பு](https://tn96news.com/wp-content/uploads/2024/03/20240306112725_485A0540-2-850x560.jpg)
சென்னை பல்கலைக்கழகத்தின் சமூகவியல் துறை சார்பில் காலநிலை மாற்றத்தின் சமூக விளைவுகள் குறித்த சர்வதேச மாநாடு பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது.
மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பசுமை தாயகம் தலைவர் சவுமியா அன்புமணி கலந்து கொண்டு காலநிலை மாற்றத்தின் விளைவுகள் குறித்து சிறப்புரையாற்றினார்.
அவர் பேசும்போது, “காலநிலை மாற்றம் மிக மோசமான நிலையை எட்டியுள்ளது” என்று குறிப்பிட்டார்.
சமூகவியல் துறையின் தலைமை பேராசிரியர் தமிழரசன் , திட்டமிடல் மற்றும் சுற்றுச்சூழல் துறை பேராசிரியர் லாரா வெர்டிலி , சமூகவியல் துறையின் உதவி பேராசிரியர் அகிலன் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டு பேசினர்.
![Digiqole Ad](https://tn96news.com/wp-content/uploads/2023/01/add-1.jpg)