திமுக கூட்டணியில் முறிவா? மதிமுக நிர்வாக குழுவின் அவசர கூட்டம் நாளை நடக்கிறது

 திமுக கூட்டணியில் முறிவா? மதிமுக நிர்வாக குழுவின் அவசர கூட்டம் நாளை நடக்கிறது

திமுக கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மதிமுக ஆகிய கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்குவதில் சிக்கல் நீடித்து வருகிறது.

மதிமுக வை பொருத்தவரை 3 தொகுதிகள் வேண்டும் என்று  கோரிக்கை விடுத்து வருகிறது. மேலும் தங்கள் கட்சியின் பம்பரம் சின்னத்தில் போட்டியிடுவதில் அக்கட்சி உறுதியாக இருக்கிறது.

ஆனால் திமுக சார்பில் 2 தொகுதிகள் ஒதுக்குதற்கு தயாராக இருக்கிறார்கள். மேலும் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில்  தான் மதிமுக வேட்பாளர்கள் போட்டியிடவேண்டும் என்று நிர்பந்தம் வைக்கப்படுகிறது.

இதற்கு மதிமுக சம்மதிக்கவில்லை. தொடர்ந்து பம்பரம் சின்னத்தில் தான் போட்டியிடுவோம் என்று சொல்லி வருகிறார்கள். ஆனால் இதற்கு திமுக செவி சாய்க்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் மதிமுக நிர்வாக குழு நாளை(வியாழக்கிழமை) அவசரமாக கூடுகிறது. சென்னை எழும்பூரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகமான தாயகத்தில் இந்த கூட்டம் நடக்கிறது.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் நடக்கும் இந்த கூட்டத்தில் இது பற்றி ஆலோசிக்கப்படுகிறது. கட்சியின் நிர்வாக குழுவினர் எடுக்கும் முடிவே இறுதியானது.

எனவே திமுக கூட்டணியில் மதிமுக நீடிக்குமா? அல்லது கூட்டணியில் முறிவு ஏற்படுமா? என்பது நாளைய கூட்டத்துக்கு  பிறகு தெரிய வரும்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *