• May 20, 2024

பா.ஜனதாவுடன் தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணி; ஜி.கே.வாசனுடன் அண்ணாமலை சந்திப்பு

 பா.ஜனதாவுடன் தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணி; ஜி.கே.வாசனுடன் அண்ணாமலை சந்திப்பு

பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுடன் தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணி அமைத்து போட்டியிட முடிவு செய்து உள்ளதாக ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை, ஜி.கே.வாசனை சந்தித்தார். அப்போது தொகுதி ஒதுக்கீடு தொடர்பாக பேசப்பட்டது.

5 மக்களவைத் தொகுதிகள், ஒரு மாநிலங்களவை எம்பி என்று பாஜக கூட்டணியில் தமாகா போட்டியிட உள்ளதாகவும், 3 தொகுதி என்றால் சைக்கிள் சின்னம், 5 தொகுதி என்றால் தாமரை சின்னம் தான் என்று பாஜக தரப்பில் தெரிவிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. எனினும் அதிகாரப்பூர்வ தகவல் இல்லை.

அண்ணாமலை கூறுகையில், “தமிழகத்தில் பாஜக அணியில் தமிழ் மாநில காங்கிரஸ் முதல் கட்சியாக இணைந்துள்ளது. கடந்த 6-7 மாதங்களாக ஜி.கே.வாசன் சில முயற்சிகளை மேற்கொண்டார். .பாரம்பரியம் மிக்க கட்சியாக தமிழ் மாநில காங்கிரஸ் விளங்குகிறது” என்றார்.


Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *