• October 26, 2026

கார்விபத்தில் தூத்துக்குடியை  சேர்ந்த 4 பேர் பலி

 கார்விபத்தில் தூத்துக்குடியை  சேர்ந்த 4 பேர் பலி

தூத்துக்குடி, 3 வது மைல் பகுதியை சேர்ந்த 11 பேர்  நேற்று இரவு வேளாங்கண்ணிக்கு காரில் சென்று கொண்டிருந்தனர். தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே உள்ள மனோரா கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் சாலையோரம் இருந்த பக்கவாட்டுசுவரில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கார் மோதி விபத்துக்குள்ளானது

இந்த விபத்தில் சின்னபாண்டி (வயது 35), பாக்கியராஜ் (60), ஞானம்மாள் (60), ராணி (40) ஆகிய 4 பேர் படுகாயம் அடைந்து இறந்து போனார்கள். மேலும் 7 பேர் படுகாயத்துடன் தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். சேதுபாவாசத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மு.க.ஸ்டாலின் இரங்கல்

தஞ்சாவூர் அருகே கார் விபத்தில் தூத்துக்குடியைச் சேர்ந்த 4பேர் உயிரிழந்த நிலையில், அவர்களது குடும்பத்தினருக்கு முதல்-அமைச்சர்  மு.க.ஸ்டாலின் ஆறுதல் மற்றும் நிதியுதவியை அறிவித்துள்ளார்.  அவர் வெளியிட்ட இரங்கல் செய்தியில் கூறி இருப்பதாவது:-

, தூத்துக்குடியில் இருந்து நான்கு சக்கர வாகனத்தில் வேளாங்கண்ணிக்கு குடும்ப நிகழ்ச்சிக்காக செல்லும் வழியில் தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், சேதுபாவாசத்திரம், மனோரா அருகில் இன்று அதிகாலையில் எதிர்பாராதவிதமாக நிகழ்ந்த விபத்தில் பாக்கியராஜ் (வயது 62) த/பெ.யாகப்பதேவர், ஞானம்மாள் (வயது 60) க/பெ.அந்தோணி, ராணி (வயது40) க/பெ. மாசாணம், சின்னபாண்டி (வயது 40), த/பெ. முருதையா ஆகிய நால்வரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.

மேலும், இவ்விபத்தில் பலத்த காயமடைந்து தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு சிறப்புச் சிகிச்சை அளிக்கவும் அறிவுறுத்தியுள்ளேன். இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சமும், பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரமும், லேசான காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.25 ஆயிரமும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு கூறி உள்ளார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *