அமைச்சர் கீதா ஜீவனுடன் தேவர் சமூக நலசங்கத்தினர் சந்திப்பு
கோவில்பட்டி தேவர் சமூக நலச் சங்கம் சார்பில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவனை நேரில் சந்தித்து மனு அளித்தனர். மனுவில் “தூத்துக்குடி மாவட்டத்தில் வாழும் தேவர் சமூகம் சீர் மரபினர் பிரிவுக்கு உள்ள மத்திய மாநில அரசுகளின் சலுகைகள் கிடைக்க முகாம் நடத்த வேண்டும். சீர் மரபினர் சான்றிதழ் கிடைக்க மற்றும் சீர்மரபினர் சார்ந்த சலுகைகள் நலத்திட்ட உதவிகள் மானியங்கள் கிடைக்க செய்ய வேண்டும்” என்று கூறப்பட்டு இருந்தது.
தேவர் சமூக நலச் சங்கம் தலைவர் அசோக்குமார், செயலாளர் வேல்முருகன், பொருளாளர் கார்மேக பாண்டியன், துணைத் தலைவர் பூல் பாண்டியன், துணைச் செயலாளர் மாரிமுத்து, நிர்வாக குழு உறுப்பினர்கள் ராஜமார்த்தாண்டன், சின்ன மாரிமுத்து ஆகியோர் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.







