• October 26, 2026

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 18 காளைகளை அடக்கிய வீரர்

 அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 18 காளைகளை அடக்கிய வீரர்

உலக புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி நேற்று  காலை 7 மணிக்கு தொடங்கி  மாலை 6.15 மணிக்கு நிறைவடைந்தது. மொத்தம் 810 காளைகள் களத்தில் இறக்கி விடப்பட்டன,

மாடுபிடி வீரர்கள் களத்தில் குதித்து காளைகளை அடக்கினார்கள். பல காளைகள், மாடுபிடி வீரர்களை பந்தாடின. இறுதியில் 18 காளைகளை அடக்கி கருப்பாயூரணியை சேர்ந்த  கார்த்தி என்பவர் முதலிடம் பிடித்தார். இவருக்கு முதல் பரிசாக கார் வழங்கப்பட்டது. 17 காளைகளை அடக்கி பூவந்தியை சேர்ந்த அபிசித்தர் இரண்டாம் பரிசு பெற்றார்.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் சிறந்த காளையாக மேலூர் குணா என்பவரின் மாடு வென்று கார் பரிசு பெற்றுள்ளது.சிறந்த காளையாக 2ம் பரிசுக்கு மதுரை காமராஜபுரம் வெள்ளைக்காளி சௌந்தர் என்பவரின் மாடு தேர்வு செய்யப்பட்டுள்ளது.

தற்போது முதல் பரிசு பெற்ற  கருப்பாயூரணி கார்த்தி, 2022ம் ஆண்டு ஜல்லிக்கட்டில் முதல் பரிசு பெற்றது குறிப்பிடத்தக்கது.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *