• October 26, 2026

தேசிய இளைஞர் தின விழா

 தேசிய இளைஞர் தின விழா

இந்திய அரசு  இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு அமைச்சகம்,  தூத்துக்குடி நேரு யுவ கேந்திரா சார்பில்  தேசிய இளைஞர் தின விழா  நிகழ்ச்சி கோவில்பட்டி உண்ணாமலை கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது. இக்கல்லூரியின் முதல்வர்  முனைவர் சுப்புராஜ் தலைமை தாங்கி  குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். விவேகானந்தர் திருவுருவ படத்திற்கு மலர் அஞ்சலி  செலுத்தப்பட்டது,

இந்நிகழ்ச்சிக்கு  கல்லூரியின் தமிழ்த்துறை உதவிப் பேராசிரியை ஹேமலதா வரவேற்று பேசினார், நேரு யுவ கேந்திரா நிகழ்ச்சி  அமைப்பாளர் இசக்கி நோக்க உரையாற்றினார். நேரு யுவ கேந்திரா மாவட்ட ஆலோசனை குழு உறுப்பினர் விஜயன், ஊரக வளர்ச்சி ஊராட்சிகள் துறை மாவட்ட பயிற்றுனர் ஆறுமுகம் ஆகியோர்  சிறப்புரையாற்றினார்கள் மாநில நுகர்வோர் பாதுகாப்பு குழு தலைவர் சுப்பிரமணியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்.

மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் நகரில் பிரதமர் மோடி, தொடங்கி வைக்கும் தேசிய இளையோர் விழா  தொடக்க  நிகழ்ச்சி மற்றும் உரையாற்றும் நேரடி நிகழ்ச்சி ஒளிபரப்பப் பட்டது .  இந்நிகழ்ச்சியின் செயல்பாடுகளான கல்லூரி மாணவ, மாணவிகளின் திறமைகளை வெளிக்காட்டும் பேச்சுப் போட்டி , கிராமிய நடனம்,  கிராமிய பாடல் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. முடிவில் கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் வணிகவியல் துறை உதவி பேராசிரியை கீதாராணி நன்றி கூறினார்,

 நேரு யுவ கேந்திரா மாவட்ட இளைஞர் அலுவலர் ஞானச்சந்திரன் ஆலோசனையின் பேரில்  நேரு யுவ கேந்திரா  இசக்கி  மற்றும் தேசிய இளையோர் தொண்டர்கள் ஆகியோர் விழா ஏற்பாடு செய்திருந்தனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *