• June 7, 2025

10,11,12-ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி, அட்டவணை அறிவிப்பு

 10,11,12-ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி, அட்டவணை அறிவிப்பு

மக்களவைத் தேர்தலைக் கருத்தில் கொண்டு, 10,11,12 -ம் வகுப்பு பொது தேர்வுகளை முன்கூட்டியே நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.  இது பற்றிய அறிவிப்பை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு:-

10ம் வகுப்பு

10ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வுகள் அடுத்தாண்டு பிப். 23ஆம் தேதி தொடங்கி, பிப். 29ஆம் தேதி நிறைவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், எழுத்து தேர்வு மார்ச் 26ம் தேதி தொடங்கி, ஏப். 8ம் தேதி வரை நடைபெறும்

26.3.2024 தமிழ் மற்றும் இதர மொழிப்பாடங்கள்

28.3.2024 ஆங்கிலம்

1.4.2024 கணிதம்

4.4.2024 அறிவியல்

6.4.2024 விருப்ப மொழிப்பாடம்

8.4.2024 சமூக அறிவியல்

பொதுத்தேர்வு முடிவுகள் மே 10ம் தேதி வெளியிடப்படும்.

11ம் வகுப்பு

11ம் வகுப்பு செய்முறைத் தேர்வுகள் பிப்ரவரி 19ம் தேதி தொடங்கி பிப்ரவரி 24ம் தேதி முடிவடைகிறது.

எழுத்துத் தேர்வுகள் மார்ச் 4ம் தேதி தொடங்கி மார்ச் 25ம் தேதி வரை நடைபெறுகிறது.

4.3.24 மொழிப்பாடம்

7.3.24 ஆங்கிலம்

12.3.24 இயற்பியல்/பொருளியல்

14.3.24 கணினி அறிவியல், புள்ளியியல்

18.3.24 உயிரியல், தாவரவியல், வரலாறு

21.3.24 வேதியியல், கணக்குபதிவியல்

25.3.24 கணிதம், வணிகவியல்

தேர்வு முடிவு மே 14ம் தேதி வெளியாகும்.

12ம் வகுப்பு

12ம் வகுப்பு செய்முறைத் தேர்வுகள் பிப்ரவரி 12ம் தேதி தொடங்கி 17ம் தேதி முடிவடைகிறது

 எழுத்துத் தேர்வுகள் மார்ச் 1ம் தேதி தொடங்கி 22ம் தேதி நிறைவடைகிறது.

1.3.2024 மொழிப்பாடம்

5.3.2024 ஆங்கிலம்

8.3.2024 கணினி அறிவியல், உயிரி வேதியியல், புள்ளியியல்

11.3.2024 வேதியியல், கணக்குப்பதிவியல், புவியியல்

15.3.2024 இயற்பியல், பொருளாதாரம்

19.3.2024 கணிதம், விலங்கியல், வணிகவியல்

22.3.2024 உயிரியல், தாவரவியல், வரலாறு

பொதுத்தேர்வு முடிவுகள் மே 6ம் தேதி வெளியாகும்.

3 மணி நேரம்
10, 11, 12ஆம் வகுப்புக்கான இந்த பொதுத்தேர்வுகள் அனைத்தும் காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 1.15 மணிவரை நடைபெறும். அதாவது காலை 10 மணி முதல் 10.10 மணிவரை வினாதாளை வாசிக்க நேரம் கொடுக்கப்படும். அடுத்து காலை 10.10 முதல் 10.15 வரை குறிப்பிட்ட தேர்வரை சரிபார்க்க தேர்வாளருக்கு நேரம் கொடுக்கப்படும். காலை 10.15 மணி முதல் மதியம் 1.15 மணி வரை தேர்வு எழுத சரியாக மூன்று மணிநேரம் கால அவகாசம் வழங்கப்படும். 

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *