திருச்செந்தூரில் சூரசம்ஹாரம்: தூத்துக்குடி மாவட்டத்துக்கு 18-ந் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கோ. லட்சுமிபதி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறி இருப்பதாவது:-
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் கந்தசஷ்டி திருவிழா சூரசம்ஹாரம் நிகழ்ச்சி வருகிற 18-ந் தேதி(சனிக்கிழமை) நடைபெறுவதை முன்னிட்டு அன்றையை தினம் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது.
எனினும் 18-ந்தேதி அன்று அரசு தேர்வுகள் சம்பந்தப்பட்ட மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும் தொடர்புடைய பணியாளர்களுக்கு மட்டும் இவ்விடுப்பு பொருந்தாது என தெரிவிக்கப்படுகிறது. ‘ செலாவணி முரிச்சட்டத்தின்படி பொதுவிடுமுறை நாளல்ல என தெரிவிக்கப்படுகிறது.
இத்தேர்வில் திருசெந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் கந்தசஷ்டி திருவிழா சூரசம்ஹாரம் நிகழ்ச்சி விடுமுறை நாளான 18-ந்தேதி சனிக்கிழமை வருவதாலும் மேற்படி தினத்தை அரசு அறிவிப்பின்படி தீபாவளிக்கு மறுநாளான 13.11.23 அன்று அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டு மாற்றுபணி நாளாக அரசால் அறிவிக்கபப்ட்ட நிலையில் தூத்துக்குடி மாவட்டடம் முழுவதும் அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு 18-ந்தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கபப்டுகிறது.
எனவே 18-ந்தேதிவிடுமுறைக்கு பதிலாக 9.12.23 சனிக்கிழமை மாற்று பணி நாளாக அறிவிக்கப்படுகிறது.
இவ்வாறு ஆட்சியர் கோ.லட்சுமிபதி கூறி உள்ளார்.