25 ஆயிரம் பாடல்கள் நிறைவு: பாடகர் மனோ தலைமையில் இசைக்குழுவினர் அமெரிக்கா பயணம்; 16 நகரங்களில் இசை நிகழ்ச்சி நடத்துகிறார்கள்
சென்னையை மையமாக கொண்டு கோல்டன் ரிதம்ஸ் என்ற பெயரில் கடந்த 30 ஆண்டுகளாக இசை நிகழ்ச்சிகள் நடத்தி வருபவர் கல்யாணராமன். இவர் கல்யான் என்ற பெயரில் பாடகராவும் உள்ளார். இவர் இதுவரை சுமார் 4,000 மேடை நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக நடத்தி இருக்கிறார்.
அமெரிக்காவில் ஆண்டுதோறும் தீபாவளி மற்றும் தமிழ் புத்தாண்டு நிகழ்ச்சிகளில் கோல்டன் ரிதம்ஸ் இசை நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. பல பிரபல திரைப்பட பின்னணிப் பாடகர்கள், பாடகிகள் மற்றும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்ற பாடகர்கள், பாடகிகள் இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்று பாடி வருகின்றனர்.
இந்த வருடம் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் சித்திரை திருவிழாவிற்காக கோல்டன் ரிதம்ஸ் இசைக்குழுவினர் நேரடியாக அமெரிக்கா சென்று இசை நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டு இருக்கிறார்கள்
இந்த நிகழ்ச்சி பிரபல திரைப்பட பின்னணி பாடகர் கலைமாமணி விருது பெற்ற “மனோ” திறைத்துறையில் 25 ஆயிரம் பாடல்களை நிறைவு செய்திருப்பதை கொண்டாடும் வகையிலும் இந்த இசை நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
அமெரிக்காவில் இசை நிகழ்ச்சி நடக்கும் நகரங்கள், தேதி விவரம் வருமாறு:-

அமெரிக்காவில் பல்வேறு இடங்களில் மொத்தம் 16 இடங்களில் இசை நிகழ்ச்சி நடக்கிறது. முதல் நிகழ்ச்சி வருகிற 22-ந் தேதி சான் டியாகோ நகரில் நடக்கிறது, இறுதியாக மே மாதம் 27-ந் தேதி சிகாகோ நகரில் இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது..
இசைக்குழு விவரம் வருமாறு:-
1.கல்யாணராமன்- பாடகர்-குருப் லீடர்
2. நவீன் ஜுடே- கீபோடு பிளேயர்
3. ராஜன் கீபோடு பிளேயர்
4 .ரமேஷ்- லீட் கித்தாரிஸ்ட்
5. -அட்ரியன் தினேஷ்- பாஸ் கித்தாரிஸ்ட்
6. மோகன்- டேப்ளிஸ்ட் ரிதம் பிளேயர்
7. டேனியல்- தாள வாத்தியம் பிளேயர்
8. மனோ- பின்னணி பாடகர்
9. முகேஷ்- பின்னணி பாடகர்\
10- சாம் கீர்த்தன் – பின்னணி பாடகர்
11- வர்ஷா- பின்னணி பாடகி
12- ஜானவி- பின்னணி பாடகி
13. சுந்தரி- பின்னணி பாடகி
இவர்களில் பாடகி சுந்தரி அமெரிக்காவில் வசிக்கிறார்.
இசை நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பாடகர் மனோ செவ்வாய்க்கிழமை அமெரிக்கா புறப்பட்டு சென்றார். கல்யாணராமன் தலைமயில் 11 பேர் அடங்கிய குழுவினர் இன்று(வியாழக்கிழமை) அதிகாலை சென்னையில் இருந்து விமானம் மூலம் அமெரிக்கா புறப்பட்டு சென்றனர்.

அமெரிக்காவில் 16 நகரங்களில் நடைபெறும் இசை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளுமாறும், அதற்குரிய டிக்கெட்டுகளை பெற்றுகொள்ளகோரியும் தனது ரசிகர்களுக்கு பாடகர் மனோ காணொளி மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.







