காசோலை மோசடி வழக்கில் பெண்ணுக்கு 6 மாதம் சிறை
கோவில்பட்டி டால்துரை பங்களா தெருவை சேர்ந்தவர் அ.மாரியப்பன்(வயது 60). இவர் பிரதான சாலையில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவரிடம் கோவில்பட்டி கிருஷ்ணாநகரைச் சேர்ந்த வேல்சாமி மனைவி வாசுகி(45) என்பவர் கடந்த 6.10.2013-ல் ரூ.8 லட்சம் கடன் வாங்கி உள்ளார்.
இதற்காக கடந்த 20.1.2015-ல் தனியார் வங்கி காசோலை வழங்கினார். இந்த காசோலையை மாரியப்பன் வங்கியில் செலுத்தியபோது, பணம் இல்லையென திரும்பியது. இதையடுத்து மாரியப்பன் கோவில்பட்டி விரைவு நீதிமன்றத்தில் காசோலை மோசடி வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி முகமது சாதிக் உசேன், வாசுகிக்கு 6 மாதம் சிறைதண்டனை விதித்து உத்தரவிட்டார். ஒரு மாதத்துக்குள் ரூ.10,50,000 வழங்கவில்லையென்றால் மேலும் ஒரு மாதம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் மாரியப்பன் சார்பில் வழக்கறிஞர் ஆழ்வார்சாமி சிவக்குமார் ஆஜரானார்.







