கோவில்பட்டி – மந்தித்தோப்பு சாலையை விரிவாக்கம் செய்திட வலியுறுத்தி கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு, மந்தித்தோப்பு ரோடு வியாபாரிகள் நலச் சங்கம், மற்றும் குடியிருப்போர் சங்கங்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக, தமிழ்நாடு முதலமைச்சருக்கு 1000 கடிதங்கள் அனுப்பும் போராட்டம், கடையடைப்பு, கருப்புக்கொடி ஏற்றும் போராட்டம் என பல கட்ட போராட்டங்கள் நடைபெற்றது. இப்போராட்டத்தின் காரணமாக கோவில்பட்டி சார் ஆட்சியர் தலைமையில் 31-7-26 அன்று சமாதான கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை செயல்படுத்தாத கோவில்பட்டி நகராட்சி நிர்வாகத்தை […]
தமிழக சட்டசபையில் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு, கூட்டுறவு ஆகிய துறைகள் மீதான விவாதத்தில் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அமைச்சர் வெங்கடரமணன் பேசினார். இதனை அடுத்து, தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மற்றும் கே.என். நேரு பேசினர். அவையில் அமைச்சர் செங்கோட்டையன் பேசும்போது, ரேஷன் கடை அரிசியை ஆட்டுக்கும், கோழிக்கும்தான் மக்கள் பயன்படுத்தி கொண்டிருக்கின்றனர் என்பதே உண்மை என்றார். இதனால், சர்ச்சை எழுந்தது. தி.மு.க. தரப்பில் இருந்து இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதன்பின்னர், பொதுப்பணி […]
மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் மத்திய மந்திரி அமித்ஷா தலைமையில் 31-வது தென் மாநில முதல்-மந்திரிகள் மாநாடு சென்னை மாமல்லபுரத்தை அடுத்துள்ள கோவளத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடைபெற்றது…. இதில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் விஜய், கர்நாடக முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார், ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, தெலுங்கானா… துணை முதல்-மந்திரி மல்லுப்பட்டி விக் ரமர்கா, கேரளம் முதல்-மந்திரி சதீசன், புதுச்சேரி மாநில கவர்னர் கைலாஷ்நாதன்,. அந்தமான்-நிக்கோபர் தீவுகள் துணை நிலை கவர்னர், லட்சத்தீவு அதிகாரிகள் மற்றும் அந்தந்த மாநில […]
!நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் பகுதியைச் சேர்ந்தவர் ஆபிரகாம் (வயது 53). மதபோதகரான இவர் அப்பகுதியில் ஊழியம் செய்து வந்ததுடன், பல்வேறு மாவட்டங்களுக்கு பெண்கள் மற்றும் குழந்தைகளை அழைத்து சென்று ஊழியம் செய்து வந்துள்ளார். கடந்த 2022-ஆம் ஆண்டு, ஊழியம் செய்வதற்காக அழைத்துச் செல்லப்பட்ட 12, 13 மற்றும் 8 வயதுடைய ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 சிறுமிகள் உட்பட மொத்தம் 4 சிறுமிகளுக்கு ஆபிரகாம் பாலியல் தொல்லை கொடுத்து வன்கொடுமை செய்துள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமிகள் கூறிய தகவலின் […]
திருநெல்வேலி அருகே வடுகம்பட்டியில் உள்ள தனியார் காகித ஆலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள காகித பண்டல்கள் முற்றிலும் எரிந்து நாசமாகின. தீயின் வீரியம் அதிகமாக இருந்ததால், இன்று 2-வது நாளாகத் தீயணைப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. காகித ஆலையில் 500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். நேற்று மதியம் சுட்டெரித்த வெயில் மற்றும் பலத்த காற்று காரணமாக, ஆலையின் ஒரு பகுதியில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பழைய காகித பண்டல்களில் […]
மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் மத்திய மந்திரி அமித்ஷா தலைமையில் 31-வது தென் மாநில முதல்-மந்திரிகள் மாநாடு சென்னை மாமல்லபுரத்தை அடுத்துள்ள கோவளத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் தென் மண்டல குழுவின் தலைவராக அமித்ஷாவும், துணை தலைவராக முதல்-அமைச்சர் விஜய்யும் உள்ளனர். மதியம் 1.30 மணி வரை தென் மாநில முதல்-மந்திரிகள் மாநாடு மற்றும் தென் மண்டல குழு கூட்டம் நடைபெறுகிறது . இந்த மாநாட்டில் மாநிலங்களுக்கிடையே ஒத்துழைப்பு, பாதுகாப்பு, பொருளாதார […]
தஞ்சையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பிறந்தநாள் மாநாட்டு விளம்பர பேனரை மாநகராட்சி நிர்வாகம் அனுமதியின்றி வைக்கப்பட்டதாக கூறி அகற்றியது. இதனைக் கண்டித்து அக்கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த தஞ்சை விளார் பகுதியைச் சேர்ந்த ஆகாஷ் (26) என்ற இளைஞர், மறியலில் ஈடுபட்டவர்களிடம் வழிவிடுமாறு வாக்குவாதம் செய்தார். இளைஞருக்கும் கட்சியினருக்கும் இடையே மோதல் உருவாகாமல் தடுக்க பாதுகாப்புப் பணியில் இருந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அப்துல் ரஹீம் தலையிட்டார். அப்போது ஆகாஷ் போலீசாருடன் […]
தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் எதிர்வரும் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் வடிகால்கள், சிறுபாலங்கள் மற்றும் பிரதான மழைநீர் வடிகால்களை தூர்வாரும் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் பொது சுகாதாரத்திற்கு கேடு விளைவிக்கும் வகையில் தனியார் உணவு விடுதி ஒன்று விதிமுறைகளுக்கு முரணாக, இயந்திரக் குழியுடன் அமைக்கப்பட்டிருந்த பிரதான மழைநீர் வடிகாலில் சமையல் மற்றும் உணவுக் கழிவுகளை நேரடியாக கலந்தது கள ஆய்வின்போது கண்டறியப்பட்டது. இதன் காரணமாக சுமார் 100 […]
மதுரை மாவட்டம் சேடபட்டி போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட குமாரபுரம் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன் (வயது 25). பி.காம் பட்டதாரி. கடந்த 2015-ம் ஆண்டில் இவரும், அதே பகுதியை சேர்ந்த பாண்டீஸ்வரி (வயது 21) என்பவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். சில மாதங்களிலேயே இரு குடும்பத்தினருக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் கர்ப்பிணியாக இருந்த பாண்டீஸ்வரிக்கு கருக்கலைப்பு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன், மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு நிலவியதால் பாண்டீஸ்வரி தன் பெற்றோர் வீட்டில் […]
திமுக ஆட்சியில் கடந்த 2024-ம் ஆண்டு அகரம்பள்ளிப்பட்டு – தொண்டமானூர் கிராமங்களை இணைக்கும் வகையில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே ரூ.16 கோடியில் உயர்மட்ட பாலம் கட்டப்பட்டது. தமிழக நெடுஞ்சாலைத்துறை சார்பில் நபார்டு மற்றும் கிராமச் சாலைகள் திட்டத்தின் கீழ் இந்த பாலம் கட்டப்பட்டது. 2024 செப்., 2ம் தேதி தமிழக அமைச்சராக இருந்த எ.வ.வேலு அதனை திறந்து வைத்தார். தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட 119 அடி உயரம் கொண்ட சாத்தனூர் அணை, பெஞ்சல் புயல் காரணமாக […]







