கோவில்பட்டி சைவ செட்டியார் சங்கம் 53வது ஆண்டு மகா சபைக் கூட்டம் மந்தித்தோப்பு ரோடு சைவ செட்டியார் மீட்டிங் ஹாலில் நடந்தது. கூட்டத் தலைவர் மீனாட்சி சுந்தரம், சங்கத் தலைவர் சிவபிரகாசம் தலைமை தாங்கினர். பொருளாளர் கலியுகத்து அய்யனார், துணைத் தலைவர் சுப்பிரமணியன், துணைச் செயலாளர் லட்சுமணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் சேனாபதி ஆண்டறிக்கை வாசித்தார். கூட்டத்தில், சைவ செட்டியார் சமூகத்தில் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் முதலிடம் பிடித்த மாணவர் சிவசங்கரபாண்டியன், 2-வது இடம் […]
தூத்துக்குடி மாவட்ட பள்ளி அளவிலான இரண்டாம் ஆண்டு மாணவியர் கபடி போட்டி நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக முருகேச பாண்டியன் , பொன் முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர். தேவேந்திர குல வேளாளர் கல்வி சங்க உறுப்பினர்கள், அனைத்து அணிகளுக்கும் உணவு அன்பளிப்பு செய்த செல்வத்தேவர், சிறப்பு அழைப்பாளர்களாக ஆசிரியர் அந்தோணி, முனைவர் சம்பத்குமார், சத்யா செல்வின் (த.வெ.க) பங்கேற்றனர் தூத்துக்குடி வட்டத்தில் உள்ள 12 அணிகள் போட்டியில் பங்கு பெற்றன. லீக் மற்றும் நாக் அவுட் […]
கோவில்பட்டி திருவள்ளுவர் மன்ற கூட்டம் அஞ்சல் அலுவலக தெருவில் உள்ள மன்ற கட்டிடத்தில் நடந்தது. ‘படைப்பாளிகளின் பார்வையில் அவர்தம் படைப்புகள்’ என்ற தலைப்பில், கோவில்பட்டி திருவள்ளுவர் மன்றத்தின் ஆய்வுக் கூட்டம் நடந்தது. தொழிலதிபர் வெங்கடேஷ் தலைமை தாங்கினார்.ஆஸ்கார் கல்லூரி இயக்குநர் வினோத் முன்னிலை வகித்தார். பாண்டியன் கிராம வங்கியின் முன்னாள் மேலாளரும், கரிசல் எழுத்தாளருமான காமராஜ், எழுத்தாளர் முருகேஸ்வரி, அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி தமிழாசிரியை கெங்கம்மாள் ஆகியோர் கலந்து கொண்டு ஆய்வுரை நிகழ்த்தினர். அதனைத் தொடர்ந்து, […]
டி.வி.எஸ். ,மோட்டார் கம்பெனி மற்றும் கோவில்பட்டி வெங்கடாசலம் ஏஜென்சி LLB இணைந்து டி.வி.எஸ்.சின் ஆடி மாத சிறப்பு கடன் மற்றும் எக்சேஞ்ச் மேளாவை கோவில்பட்டியில் நடத்துகின்றன, இந்த சிறப்பு விற்பனை மேளா எட்டயபுரம் சாலையில் உள்ள சி.சிதம்பர நாடார் -காமாட்சி அம்மாள் திருமண மண்டபத்தில் இன்று 27,ம்தேதி காலை தொடங்கியது, தொடர்ந்து செவ்வாய், புதன்கிழமைகளில் இந்த மேளா நடக்கிறது. டி.வி.எஸ்.நிறுவன தயாரிப்புகளான எக்ஸ்.எல்.100 அலாய் வீல், ஜெஸ்ட் 110, ஜூபிடர் 110, ஜூபிடர் 125, என்டார்க் 125, […]
கோவில்பட்டி பிருந்தாவன்ஸ் கிட்ஸ் யுனிவர்சிட்டி பள்ளி சார்பாக கிருஷ்ணா நகரில் CISCE பள்ளிகளுக்கு இடையில் மண்டல அளவிலான ஆக்கி போட்டி கிருஷ்ணாநகர் மைதானத்தில் இரண்டு நாட்கள் நடைபெற்றது., இப்போட்டியில், மண்டலத்திற்குட்பட்ட 11 CISCE பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு விளையாடினர் இப் போட்டியில் மொத்தம் 54 போட்டிகள் காலை முதல் இரவு 12 மணி வரை பகல் இரவு ஆட்டமாக மின்னொளியில் நடைபெற்றது இப் போட்டியில் 14 வயது 17 வயது 19 வயதுக்குட்பட்டோருக்கான […]
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் ஆடித்தபசு திருவிழாவை முன்னிட்டு நாளை ஜூலை 28 தேரோட்டம் நடக்கிறது.. இதையொட்டி பஸ்கள் போக்குவாரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது, இது பற்றிய விவரம் வருமாறு:- *.திருநெல்வேலியிலிருந்து வரும் பஸ்கள் ராஜபாளையம், மதுரை செல்லும் வழி: திருநெல்வேலியில் இருந்து வரும் பஸ்கள் சண்முகநல்லூர் விலக்கு வழியாக சின்னகோவிலான்குளம், சூரங்குடி, தர்மத்தூரணி, நடுவக்குறிச்சி, குத்தாலப்பேரி, பொய்கைமேடு, தளவாய்புரம் வழியாக சங்கரன்கோவில், ரயில்வேபீடர் ரோடு, TB junction signal வழியாக ராஜபாளையம் மதுரை செல்ல வேண்டும். *திருநெல்வேலியில் இருந்து […]
காமன்வெல்த் பளுதூக்குதலில் வெள்ளி வென்ற கோவில்பட்டி வீரர் ராஜா முத்துப்பாண்டி; முதல் அமைச்சர்
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் 23-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் 74 நாடுகளைச் சேர்ந்த சுமார் 3 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்தியா சார்பில் 123 பேர் கொண்ட அணி பல்வேறு பிரிவுகளில் களமிறங்கி பதக்க வேட்டையில் ஈடுபட்டு வருகிறது. அந்தவகையில், ஆண்களுக்கான 65 கிலோ எடைப்பிரிவு பளுதூக்குதல் போட்டி நடைபெற்றது. அதில், இந்தியா சார்பில் போட்டியிட்ட தமிழகத்தில் கோவில்பட்டியை சேர்ந்த ராஜா முத்துப்பாண்டி வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தினார். ஸ்னாட்ச் (Snatch) […]
தூத்துக்குடி கப்பல் கட்டும் தளம் திட்டத்திற்கு எதிர்ப்பு வலுக்கிறது; ஆட்சியர் அலுவலகத்தில் முற்றுகை
தூத்துக்குடி முள்ளக்காடு பகுதியில் உள்ள 500 ஏக்கர் உப்பளங்களில் சுமார் 300 உற்பத்தியாளர்கள் கடந்த 93 ஆண்டுகளாகச் சிறுகுறு உப்பு உற்பத்தி செய்து வருகின்றனர். இத்தொழிலை நம்பி 15,000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், சிப்காட் மூலம் 3,000 ஏக்கர் நிலங்களைக் கையகப்படுத்தி வெளிநாட்டு நிறுவனங்களுக்குக் கப்பல் கட்டும் தளம் அமைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கு கடலோர மீனவர்களும் உப்பளத் தொழிலாளர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். முன்னதாக சார் ஆட்சியர் பிரபு […]
கோவில்பட்டி கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பின் ஆலோசனைக்கூட்டம் எழுத்தாளர் சுரேஷ்குமார் தலைமையில் நடைபெற்றது. கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு நிர்வாகி ஜெயா சனார்த்தனன் முன்னிலை வகித்தார். நடைபெற்ற வேலைகள் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து தலைவர் க. தமிழரசன் விளக்கி பேசினார். கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. *திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் ஆளுநர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில், மதச் சுதந்திரத்திற்கு, தனி மனித உரிமைக்கு, பன்முகப் பாரம்பரியத்திற்கு எதிரான “வந்தே மாதரம்” பாடல் கட்டாயமாக பாடவேண்டும் என்றும், தேசிய […]
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அறிவிப்பின்படி தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பெருமாள்சாமி அறிவுறுத்தலின்படி கோவில்பட்டியில் காந்தி மண்டபத்தில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து பின்பு மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலமாக சென்று பயணியர் விடுதி முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நீட் தேர்வுமற்றும் CBSE தேர்வுகளை கண்டித்தும் டெல்லியில் நடைபெற்ற மாணவர்களுக்கு எதிரான மத்திய அரசின் நடவடிக்கைகளை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்திற்கு நகரத் தலைவர் அருண்பாண்டியன் வட்டாரத் தலைவர் ரமேஷ் மூர்த்தி ஆகியோர் தலைமை தாங்கினர்.ஐஎன்டியுசி […]







