கோவில்பட்டி ரோட்டரி சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு
கோவில்பட்டி ரோட்டரி சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா சௌபாக்கியா மகாலில் நடந்தது.
ரோட்டரி சங்க கடந்த ஆண்டு தலைவர் ராஜ்குமார் தலைமை தாங்கி அனைவரையும் வரவேற்றார். ரோட்டரி மாவட்ட கிளப் சர்விஸ் சேர்மன் விநாயகா ரமேஷ் முன்னிலை வகித்தார்.

ரோட்டரி மாவட்ட முன்னாள் ஆளுநர் ஷாஜகான் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 2026-27ம் நிதியாண்டிற்கு தலைவராக முத்து முருகன், செயலாளராக ரமேஷ் குமார், பொருளாளராக சீனிவாசன் உட்பட புதிய நிர்வாகிகளுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்து பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.
2026-27ம் நிதியாண்டில் கோவில்பட்டி ரோட்டரி சங்கத்தில் புதிதாக இணைந்த 6 உறுப்பினர்களுக்கு ரோட்டரி மாவட்ட துணை ஆளுநர் விக்னேஸ்வரன் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

மூத்த மருத்துவர் என்.டி சீனிவாசன்,வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ராதாகிருஷ்ணன்,மாவட்ட சமூகத்தணிக்கை வள அலுவலர் சேகர்,பசும்பொன் கல்வி அறக்கட்டளை தலைவர் பரமசிவம், பில்டர்ஸ் அசோசியேசன் சங்க நிர்வாகிகள் ராம்பிரசாத், கனகராஜ், சிவில் என்ஜினியர்ஸ் அசோசியேசன் சங்க நிர்வாகிகள் காசிராஜன், ராகவன், ரோட்டரி மாவட்ட முன்னாள் துணை ஆளுநர்கள் ஜெயப்பிரகாஷ் நாராயணசாமி,ஆசியா பார்ம்ஸ் பாபு, நாராயணசாமி, எம்.எஸ்.எஸ்.வி. பாபு, பரமேஸ்வரன்,முத்துச்செல்வன்,முன்னாள் செயலாளர் பழனிக்குமார் உள்பட பொதுநல அமைப்புகளின் பிரதிநிதிகள்,ரோட்டரி சங்க உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். ரோட்டரி சங்க செயலாளர் ரமேஷ் குமார் நன்றி கூறினார்.







